பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை பி.எப்., அலுவலகத்தில் ஜூன் 15ல் 'பென்ஷன் அதாலத்'

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் முதன்மை மண்டல கமிஷனர் தலைமையில் ஜூன் 15ல் இணையவழியில் 'பென்ஷன் அதாலத்' நடக்கிறது.இதில் ஓய்வூதியர்கள் தங்களின் பென்ஷன் தொடர்பான பிரச்னை, மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் உள்ளிட்ட குறைகளை சமர்ப்பிக்கலாம். மேலும் மூன்று மாதத்தில் பென்ஷன் பெற இருக்கும் தொழிலாளர் தங்களது வைப்பு நிதி கணக்கு சேர்ப்பது, நிறுவன முதலாளிகள்

மதுரை:மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் முதன்மை மண்டல கமிஷனர் தலைமையில் ஜூன் 15ல் இணையவழியில் 'பென்ஷன் அதாலத்' நடக்கிறது.

இதில் ஓய்வூதியர்கள் தங்களின் பென்ஷன் தொடர்பான பிரச்னை, மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் உள்ளிட்ட குறைகளை சமர்ப்பிக்கலாம். மேலும் மூன்று மாதத்தில் பென்ஷன் பெற இருக்கும் தொழிலாளர் தங்களது வைப்பு நிதி கணக்கு சேர்ப்பது, நிறுவன முதலாளிகள் தங்களின் ஊழியர் பென்ஷன் தொடர்பான குறைகளையும் அளிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் தங்கள் குறைகளை வாட்ஸ்ஆப் வசதியுள்ள அலைபேசி எண்ணுடன் இவ்வலுவலக ro.madurai@epfindia.gov.in என்ற மின்னஞ்சலுக்கு ஜூன் 14க்குள் அனுப்ப வேண்டும். இணையவழி கூட்டத்தில் பங்கேற்பதற்கான தொடர்பு எண் தனியாக தெரிவிக்கப்படும்.கூகுள் பிளே ஸ்டோர் மூலம் 'Microsoft Teams App' செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து அதனுடன் இணைத்து கூட்டத்தில் பங்கேற்கலாம் என வருங்கால வைப்பு நிதி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X