அரசியல் செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்டத்தை தவிர்க்க டோக்கன்: அமைச்சர் தகவல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மதுரை:''தமிழகத்தில் 575 பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கையாக கூட்டத்தை தவிர்க்க டோக்கன் வழங்கி மின்னணு திரை மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என மதுரையில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.யானைமலை ஒத்தக்கடை, அலங்காநல்லுார், சோழவந்தான் சார் பதிவாளர் அலுவலகங்களை ஆய்வு செய்த பின் அமைச்சர் கூறியதாவது:தாமதமின்றி பத்திரபதிவு செய்து

மதுரை:''தமிழகத்தில் 575 பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கையாக கூட்டத்தை தவிர்க்க டோக்கன் வழங்கி மின்னணு திரை மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என மதுரையில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

யானைமலை ஒத்தக்கடை, அலங்காநல்லுார், சோழவந்தான் சார் பதிவாளர் அலுவலகங்களை ஆய்வு செய்த பின் அமைச்சர் கூறியதாவது:தாமதமின்றி பத்திரபதிவு செய்து கொடுக்கவும், வில்லங்க சான்று, நகல் கேட்டால் மறுநாளே வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு செய்ய வருவோருக்கு டோக்கன் வழங்கி முறையாக ஒலிபெருக்கி மூலம் டோக்கன் எண்,பெயர், பதிவு நடக்கும் நேரம் ஆகியவற்றை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க மின்னணு திரை மூலம் அலுவலக முகப்பில் வசதிகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.மதுரை மண்டலத்திலுள்ள 102 பத்திர பதிவு அலுவலகங்களிலும் விரைவில் இந்த வசதிகள் நடைமுறைக்கு வரும்.

பத்திர எழுத்தாளர்களுக்கும், பதிவாளர்களுக்கும் இடையே இடைத்தரகர்கள் கூடாது என உத்தரவிட்டுள்ளேன்.நியாயமான பதிவு கட்டணம், அதற்குரிய எழுத்து கட்டணம் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. பத்திர அலுவலகங்களில் லஞ்சம், இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எம்.எல்.ஏ., வெங்கடேசன், பி.ஆர்.ஓ., நவீன் பாண்டியன், ஏ.பி.ஆர்.ஓ., வினோத் உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X