சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை உள்பட 6 மாவட்டங்களில் நேற்றைய கொரோனா பலி 39

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று மட்டும் 39 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். தேனியில் அதிகபட்சமாக 19 பேர் இறந்தனர். பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு குறையாத நிலை தொடர்கிறது.மதுரையில் நேற்று 279 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 279 பேர் குணமடைந்தனர். 6 பேர் பலியாகினர். மொத்தம் 69 ஆயிரத்து 320 பேர் பாதிக்கப்பட்டு 60ஆயிரத்து 457 பேர்

மதுரை:மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று மட்டும் 39 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். தேனியில் அதிகபட்சமாக 19 பேர் இறந்தனர். பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு குறையாத நிலை தொடர்கிறது.

மதுரையில் நேற்று 279 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 279 பேர் குணமடைந்தனர். 6 பேர் பலியாகினர். மொத்தம் 69 ஆயிரத்து 320 பேர் பாதிக்கப்பட்டு 60ஆயிரத்து 457 பேர் குணமடைந்தனர். 7854 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஆக்சிஜன் படுக்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 3366 படுக்கைகளில் 1390, 1544 சாதாரண படுக்கைகளில் 493, 670 ஐ.சி.யு., வில் 480 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திண்டுக்கல்லில் நேற்று 240 பேர் பாதிக்கப்பட்டனர். 351 பேர் குணமடைந்த நிலையில் 3 பேர் இறந்தனர். இதுவரை 29 ஆயிரத்து 757 பேர் பாதிக்கப்பட்டு 27 ஆயிரத்து 342 பேர் குணம் அடைந்தனர். மொத்த பலி 485. தற்போது 1930 பேர் சிகிச்சையில் உள்ளனர். 919 ஆக்சிஜன் படுக்கைகளில் 700, 1219 சாதாரண படுக்கைகளில் 559, 149 ஐ.சி.யு.,வில் 90 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஆக்சிஜன், ஐ.சி.யு., வார்டுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. இறப்பும் குறையவில்லை.

தேனியில் நேற்று மட்டும் 19 பேர் இறந்தனர். 258 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 755 பேர் குணமடைந்தனர். மொத்தம் 40 ஆயிரத்து 111 பேர் பாதிக்கப்பட்டு 36 ஆயிரத்து 694 பேர் குணமடைந்தனர். 431 பேர் பலியாகினர். 2986 பேர் சிகிச்சையில் உள்ளனர். 631 ஆக்சிஜன் படுக்கைகளில் 358, 381 சாதாரண படுக்கைகளில் 149, 66 ஐ.சி.யு.,வில் 56 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

ராமநாதபுரத்தில் நேற்று 121 பேர் பாதிக்கப்பட்டனர். 230 பேர் குணமாகினர். 7 பேர் இறந்தனர். இதுவரை 18 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டதில் 15 ஆயிரத்து 724 பேர் குணமடைந்தனர். மொத்தம் 294 பேர் இறந்தனர். 2421 பேர் சிகிச்சையில் உள்ளனர். 581 ஆக்சிஜன் படுக்கைகளில் 192, 918 சாதாரண படுக்கைகளில் 93, 105 ஐ.சி.யு.,வில் 25 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சிவகங்கையில் புதிதாக 102 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. 148 பேர் குணம் அடைந்தனர். பலி 2. மொத்தம் 15 ஆயிரத்து 929 பேர் பாதிக்கப்பட்டு 14ஆயிரத்து 231 பேர் குணமடைந்தனர். 178 பேர் இறந்துள்ளனர். 1520 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1268 ஆக்சிஜன் படுக்கைகளில் 520, 691 சாதாரண படுக்கையில் 237, 178 ஐ.சி.யு.,வில் 136 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

விருதுநகரில் நேற்றைய தொற்று 294, குணமடைந்தோர் 932, பலி 2, இதுவரை 41 ஆயிரத்து 857 பேர் பாதிக்கப்பட்டு 37 ஆயிரத்து 968 பேர் குணமடைந்தனர். 475 பேர் பலியாகியுள்ளனர். மதுரைக்கு அடுத்து இறப்பு இங்குதான் அதிகமாக உள்ளது. 3414 பேர் சிகிச்சையில் உள்ளனர். 562 ஆக்சிஜன் படுக்கைகளில் 361, 521 சாதாரண படுக்கைகளில் 241, 108 ஐ.சி.யு.,வில் 80 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

தென் மாவட்டங்களில் தினசரி பலி குறையாமல் தொடர்கிறது. முழு ஊரடங்கு முடிந்த நிலையிலும் ஆக்சிஜன், ஐ.சி.யு., வார்டு நோயாளிகளின் எண்ணிக்கை முழுவதுமாக குறையவில்லை. தமிழகத்தில் நான்கு நாட்களாக தடுப்பூசியும் இல்லை. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்தே மக்கள் கூட்டம் கூட்டமாக கடைவீதிகளில் கூடுகின்றனர். இறப்புகள் குறையாத நிலையிலும் பயமின்றி பெயருக்கு மாஸ்க்கை கழுத்தில் அணிந்து வருகின்றனர்.

பேசும் போது அனிச்சை செயலாக மாஸ்க்கை கீழே இறக்குகின்றனர். இதனால் எளிதில் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவ வாய்ப்புள்ளது. அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதோடு, மக்களும் நோய் பரவல், இறப்பு ஆகியவற்றை உணர்ந்து பொதுவெளியில் நடமாடுவதை தவிர்த்தால் மட்டுமே கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.


பச்சிளம் குழந்தை டிஸ்சார்ஜ்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிறந்த மூன்றாவது நாளில் கொரோனா உறுதியான ஆண் குழந்தை ஆறாவது நாளான நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.குழந்தையின் தாயான சாத்துாரை சேர்ந்த 30 வயது பெண் கொரோனா குணமாகி இருநாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆனார். டாக்டர்கள் கூறுகையில், "சுகப்பிரசவம் என்பதால் தாய்க்கும், சேய்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தது. இதனால் எளிதில் தொற்றில் இருந்து மீண்டனர்" என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X