அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏழு பேர் விடுதலை தவறான முன்னுதாரணம் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் சாடல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விருதுநகர்:"ராஜிவ் கொலையில் தொடர்புடைய ஏழு பேரை விடுதலை செய்யக்கோருவது தவறான முன்னுதாரணம் என காங். எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார்.விருதுநகரில் அவர் கூறியதாவது: ராஜிவ் கொலையில் துாக்கிற்கு செல்ல வேண்டிய நளினி, முருகனை காப்பாற்றியவர் சோனியா. கொலையில் தொடர்புடைய ஏழு பேர் விடுதலை கோரிக்கை தவறான முன்னுதாரணம் என்பது காங்., அடிமட்ட தொண்டனின் எண்ணம்.அப்படி விடுதலை

விருதுநகர்:"ராஜிவ் கொலையில் தொடர்புடைய ஏழு பேரை விடுதலை செய்யக்கோருவது தவறான முன்னுதாரணம் என காங். எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார்.

விருதுநகரில் அவர் கூறியதாவது: ராஜிவ் கொலையில் துாக்கிற்கு செல்ல வேண்டிய நளினி, முருகனை காப்பாற்றியவர் சோனியா. கொலையில் தொடர்புடைய ஏழு பேர் விடுதலை கோரிக்கை தவறான முன்னுதாரணம் என்பது காங்., அடிமட்ட தொண்டனின் எண்ணம்.

அப்படி விடுதலை செய்ய வேண்டுமானால் தமிழக சிறைச்சாலைகளில் 14 ஆண்டு ஆயுள் தண்டனை முடிந்து சிறை தண்டனை அனுபவிக்கும் அனைவரையும் விடுவிக்க வேண்டும். அப்படி செய்தால் ஏழு பேரையும் விடுவிப்பதில் எந்த தவறும் இல்லை. ஏழு பேரில் நான்கு பேர் இலங்கை தமிழர்கள். ஏழு பேர் விடுதலையில் தி.மு.க., நிலைப்பாடு வேறு, காங்., நிலைப்பாடு வேறு, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X