பொது செய்தி

தமிழ்நாடு

கல்வித்துறையில் தொடரும் அறிவிப்பு குளறுபடி : ஆசிரியர் சங்கம் கண்டனம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சிவகங்கை:காலையில் அறிவிப்பு, மாலையில் ரத்து என கல்வித்துறையில் அன்றாடம் குழப்பமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுவதால் ஆசிரியர், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.,'' என தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன், பொதுசெயலாளர் எஸ்.மகாராஜன் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது,கல்வித்துறையில் 2017 முதல் காலையில் ஒரு அறிவிப்பு,

சிவகங்கை:காலையில் அறிவிப்பு, மாலையில் ரத்து என கல்வித்துறையில் அன்றாடம் குழப்பமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுவதால் ஆசிரியர், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.,'' என தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன், பொதுசெயலாளர் எஸ்.மகாராஜன் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது,கல்வித்துறையில் 2017 முதல் காலையில் ஒரு அறிவிப்பு, மாலையில் அது ரத்து என வெளியாகி வருகிறது. கொரோனா பரவலால் 8.5 லட்சம் பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி தேர்வை அரசு ரத்து செய்தது. ஆனால், 4 மாதங்களுக்கு முன் தேர்வுகள் ரத்தான 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி அளிப்பது குறித்து தெளிவான முடிவை தமிழக அரசு எடுக்கவில்லை.

இதனால், பிளஸ் 1 சேர்க்கைக்கு உத்தரவிட்டு, பின் அதை திரும்ப பெறுவது. பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க வழிமுறைகளை முடிவு செய்து அறிவிக்காமல் தாமதித்து வருகின்றனர். பிளஸ் 2 , 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகள் பற்றி தெளிவான முடிவை அரசு இன்னும் எடுக்கவில்லை.

கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர், ஊழியர்களை வரவழைப்பது ஆசிரியர் சமுதாயத்தின் உயிர்களோடு விளையாடும் நிலை உள்ளது. இன்னும் பாட புத்தகங்கள் வழங்கவில்லை. பிறகு எப்படி ஆன்லைனில் கல்வி கற்பிக்க முடியும்.

எனவே கல்வித்துறையில் எடுக்கும் முடிவுகளை, அடிக்கடி மாற்றுவதின் மூலம் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X