பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே வளர்ச்சிக்கு தனி அமைச்சர் முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
நாகர்கோவில்:கேரளத்தை போல் தமிழகத்திலும் ரயில்வே வளர்ச்சிக்கு தனி அமைச்சர் நியமிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ரயில்வே மத்திய அரசின் வசம் இருந்தாலும் பாதை அமைப்பு நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றை மாநில அரசு செய்து தர வேண்டும். கேரளாவில் ரயில்வே வளர்ச்சிக்காக தனி அமைச்சர் நியமிக்கப்படுகிறார். இதனால் அங்கு ரயில்களின்

நாகர்கோவில்:கேரளத்தை போல் தமிழகத்திலும் ரயில்வே வளர்ச்சிக்கு தனி அமைச்சர் நியமிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரயில்வே மத்திய அரசின் வசம் இருந்தாலும் பாதை அமைப்பு நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றை மாநில அரசு செய்து தர வேண்டும். கேரளாவில் ரயில்வே வளர்ச்சிக்காக தனி அமைச்சர் நியமிக்கப்படுகிறார். இதனால் அங்கு ரயில்களின் எண்ணிக்கையும் அதிகம் பயன்படுத்துவோரும் அதிகம்.

தற்போது அங்கு அப்துல் ரகீம் விளையாட்டு மற்றும் ரயில்வே வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார். 1050 கி.மீ. துாரம் ரயில் பாதை உள்ள கேரளாவில் தனி அமைச்சகம் உள்ளதால் திட்டங்கள் தயாரித்து நிதி ஒதுக்கீடு பெற்று விடுகின்றனர்.

அதே சமயம் கேரளாவின் திருவனந்தபுரம் பாலக்காடு கோட்டங்களில் வரும் தமிழக பகுதிகளில் எந்த வளர்ச்சியும் இல்லை.தமிழகத்தில் பல ரயில் திட்டங்களும் நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது. தமிழகத்தில் தனி அமைச்சர் நியமிக்கப்பட்டால் கிடப்பில் கிடக்கும் ரயில்வே திட்டங்கள் வேகம் பெற வாய்ப்பு ஏற்படும். முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X