பொது செய்தி

தமிழ்நாடு

இடுக்கி நில அதிர்வுகள் அதிகாரிகள் ஆய்வு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் நில அதிர்வுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.இம்மாவட்டத்தில் மலையோரப் பகுதி , அணை ஆகியவற்றை மையப்படுத்தி அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. 1975 முதல் 2020 வரை சிறிய அளவிலான நிலஅதிர்வு 288 முறை ஏற்பட்டன. 2020 மார்ச் முதல் மே வரை 28 முறை நிலஅதிர்வு ரிக்டர் அளவு கோலில் 1 முதல் 2.5 வரை பதிவானது.இறுதியாக
 இடுக்கி நில அதிர்வுகள் அதிகாரிகள் ஆய்வு

மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் நில அதிர்வுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தில் மலையோரப் பகுதி , அணை ஆகியவற்றை மையப்படுத்தி அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. 1975 முதல் 2020 வரை சிறிய அளவிலான நிலஅதிர்வு 288 முறை ஏற்பட்டன. 2020 மார்ச் முதல் மே வரை 28 முறை நிலஅதிர்வு ரிக்டர் அளவு கோலில் 1 முதல் 2.5 வரை பதிவானது.இறுதியாக பாலாவை மையப்படுத்தி ஏற்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 1.2ஆக பதிவானது.

அதற்கு முன் இடுக்கி அணை , கிடங்கூர், பாம்பாடி, நெடுங்கண்டம், கட்டப்பனை ஆகிய பகுதிகளை மையப்படுத்தி நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.அது குறித்து கேரள மின் வாரியம் , டில்லியைச் சேர்ந்த என்.எஸ்.சி. நிறுவன அதிகாரிகள் இணைந்து ஆய்வு நடத்தி தகவல்களை சேகரித்து வருகின்றனர். ஊரடங்கு முடிந்தபின் விரிவாக ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.மாவட்டத்தில் நிலஅதிர்வு கண்டறிவதற்கு ஆறு இடங்களில் சிஸ்மோகிராப்' கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X