பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரணம் தர ரூ.2,098 கோடி விடுவிப்பு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனாநிவாரண தொகையின் இரண்டாவது தவணையான தலா, 2,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு, 4,196 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதில், முதல் கட்டமாக, 2,098 கோடிரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு, 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா பரவல் கால நிவாரணமாக, தலா, 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. அதில், முதல் தவணையான தலா, 2,000 ரூபாய் மே மாதம் வழங்கப்பட்டது.இரண்டாவது
TN govt, TN fights Corona, Rs 4000

சென்னை : அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனாநிவாரண தொகையின் இரண்டாவது தவணையான தலா, 2,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு, 4,196 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதில், முதல் கட்டமாக, 2,098 கோடிரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா பரவல் கால நிவாரணமாக, தலா, 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. அதில், முதல் தவணையான தலா, 2,000 ரூபாய் மே மாதம் வழங்கப்பட்டது.இரண்டாவது தவணையான, தலா, 2,000 ரூபாய், 15ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசு, 4,196 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.இந்த நிதி, நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக விடுவிக்கப்படுகிறது.

அதன்படி, இரண்டாவது தவணைக்காக ஒதுக்கிய நிதியில், முதல் கட்டமாக, 2,098 கோடி ரூபாய், நேற்று விடுவிக்கப்பட்டது.இதில், கூட்டுறவு ரேஷன் கடைகளில் உள்ள, 1.96 கோடி கார்டுதாரர்களுக்கான தொகையில், முதற்கட்டமாக, 1,959 கோடி ரூபாய், வாணிப கழகம் சார்பில், தலைமை கூட்டுறவு வங்கி கணக்கில், நேற்று மாலை செலுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



அந்த தொகையை, தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட வாரியாக உள்ள ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கணக்குகளில், மின்னணு பரிவர்த்தனை வாயிலாக, இன்று காலை செலுத்த உள்ளது. அந்த வங்கிகளில் இருந்து, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் எடுத்து, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்ய தயாராகும். இரண்டாம் தவணைக்கான இரண்டாவது கட்ட நிதி, அடுத்த சில தினங்களில் விடுவிக்கப்படும் என, தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
11-ஜூன்-202109:51:18 IST Report Abuse
அசோக்ராஜ் எல்லார் ஆலைகளும் கிர்ர்ர்ர்ருனு ஓடத் தொடங்கின சத்தம் கொல்லிமலை வரைக்கும் கேட்டுச்சாம்.
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
11-ஜூன்-202108:19:57 IST Report Abuse
kosu moolai நேற்று அறிவின் குத்தகைதாரான ஒருவர் அரசு நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் சேவை வரி பிடிப்பார்கள் என தான் சேர்ந்த கட்சி கொள்கையான தவறான தகவல் பரப்பும் வேலையை செய்திருந்தார். இன்று இந்த செய்தியில் குறிப்பிட்டு உள்ள பணபரிமாற்றத்திற்க்கு சேவை வரி கொடுத்திருப்பார்களோ ? தெளிவுபடுத்துவாரா ? கோவைக்கு தனி சட்டம் கிடையாது.
Rate this:
Cancel
11-ஜூன்-202107:31:46 IST Report Abuse
மனுநீதி மத்திய அரசு எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்துக்கொடுக்கிறது என்று கூவிவிட்டு இப்போது அரசின் பங்குகளை விற்று கருணாநிதி பிறந்தநாள் முதல் இலவசம். முவதுமாக திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் மக்கள் கைகளுக்கே பணம் சென்றாலும், தமிழ்நாடு என்னும் அளவில் இதுவொரு இழப்புத்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X