தமிழ்நாடு

விண்ணை நோக்கி... மூலப்பொருள் விலை கடும் உயர்வு: கட்டுமான தொழில் பெரும் பாதிப்பு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:கட்டுமான பொருட்கள் கடும் விலை உயர்வால், திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமான தொழில் பெரும் பாதிப்படைந்துள்ளது.கடந்த ஒரு மாத காலத்தில் அனைத்து கட்டுமானப் பொருட்களும் கடுமையாக, திடீரென விலை உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தடுப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் சில தளர்வுகள் அடிப்படையில் கட்டுமானப் பொருள் உற்பத்தியும் தொடர்ந்து
விண்ணை நோக்கி... மூலப்பொருள் விலை கடும் உயர்வு: கட்டுமான தொழில் பெரும் பாதிப்பு

திருப்பூர்:கட்டுமான பொருட்கள் கடும் விலை உயர்வால், திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமான தொழில் பெரும் பாதிப்படைந்துள்ளது.கடந்த ஒரு மாத காலத்தில் அனைத்து கட்டுமானப் பொருட்களும் கடுமையாக, திடீரென விலை உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தடுப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் சில தளர்வுகள் அடிப்படையில் கட்டுமானப் பொருள் உற்பத்தியும் தொடர்ந்து நடைபெறுகிறது.
உற்பத்திக்கு தடையோ, பொருளுக்கு அதிகளவிலான கிராக்கியோ இல்லாத நிலையில், கட்டுமானப் பொருட்கள் விலை எந்த காரணமும் இன்றி கடுமையாக உயர்ந்துள்ளது. இது பல தரப்பினரையும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்க முன்னாள் தலைவர் ஜெயராஜ் கூறியதாவது:சிமென்ட் விலை மூட்டை 350 ரூபாய்க்கு குறைவாக இருந்தது தற்போது 550 ரூபாய். ஜல்லி ஒன்றரை இஞ்ச் யூனிட் 3,400ல் இருந்து, 4 ஆயிரம் ரூபாயாகவும், எம்-சாண்ட் யூனிட் ஆயிரம் ரூபாயும் அதிகரித்துள்ளது.செங்கல் ஒரு லோடு 18 ஆயிரத்தில் இருந்து, 24 ஆயிரமாகவும், இரும்பு கம்பி டன்னுக்கு 7 முதல் 8 ஆயிரம் ரூபாயும் அதிகரித்துள்ளது. பெயின்ட் வகைகளும், ஒயரிங் பொருட்களான 'பிவிசி' பைப், மின் ஒயர்களும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.
திருப்பூரில் கட்டுமான துறையில், புரமோட்டார்கள் 500 பேர்; சிவில் இன்ஜினியர்கள் ஆயிரம் பேர், இது தவிர கட்டட மேஸ்திரிகள் 500 பேர் என கட்டடங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல ஆயிரம் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஊரடங்கால், வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் சென்று விட்டனர். இந்நிலையில், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக செலவில், 25 சதவீதம் வரை உயரும் நிலை உள்ளது.ஒப்பந்த அடிப்படையில் நடைபெறும் பணிகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை உள்ளது. கட்டுமானப் பணி பெருமளவு நிறுத்தும் நிலை உள்ளது. மாநில அளவில் இதன் தாக்கம் குறித்து, தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அரசியலில் இதெல்லாம்சாதாரணமப்பா...கட்டுமான பொருட்கள் திடீர் விலை உயர்வு குறித்து, ஒப்பந்ததாரர் ஒருவர் கூறியதாவது: தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்தால் இதுபோல் செயற்கை விலை உயர்வு ஏற்படுவது சகஜம்.கட்டுமான பொருள் உற்பத்தியாளர்கள் தேர்தல் செலவுக்கு கட்சிகளுக்கு நிதி கொடுத்ததை விலை உயர்த்துவதன் மூலம் சரிக்கட்டிக் கொள்வர்.மூலப் பொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு என எந்த காரணமும் இன்றி, உற்பத்தியும் குறையாமல், தட்டுப்பாடும் இல்லாமல் ஒரு பொருளின் விலை செயற்கையாக உயர்வதற்கு இது தான் காரணம்.
அதேநேரம், அரசு ஒப்பந்த பணிகளுக்கு இந்த விலை உயர்வைக் காரணம் காட்டி, கூடுதல் நிதியும் அனுமதிக்கப்படும்.இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய கமிஷனும் சென்று விடும். இருவகையிலும் காசு பார்க்கும் திட்டம் தான் இந்த செயற்கையான விலை ஏற்றம். இதில் பாதிப்புக்கு ஆளாவது என்னவோ, ஆயிரம் சதுர அடியில் வீடு கட்டும் நடுத்தர வர்க்கம் தான். அரசியலில் இதெல்லாம் மிகவும் சாதாரணம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X