தமிழ்நாடு

உயிருடன் உரசும் விளையாட்டு! புதை மின் வடம் அமைப்பதில் அலட்சியம்: ஆபத்தான செயலில் ஈடுபடும் மின் வாரியம்!

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கோவையில் குடிநீர் கொண்டு செல்லும் குழாய்க்கு அருகில், புதை மின் வடம் அமைப்பது, பெரும் அபாயத்துக்கு வழி வகுப்பதாகவுள்ளது.கோவை நகரில் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே, மின்புதை வடம் அமைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக நகரின் வெவ்வேறு பகுதிகளிலும் அமைக்கும் திட்டத்தை, மின் வாரியம் செயல்படுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, தற்போது
 உயிருடன் உரசும் விளையாட்டு! புதை மின் வடம் அமைப்பதில் அலட்சியம்: ஆபத்தான  செயலில் ஈடுபடும் மின் வாரியம்!

கோவையில் குடிநீர் கொண்டு செல்லும் குழாய்க்கு அருகில், புதை மின் வடம் அமைப்பது, பெரும் அபாயத்துக்கு வழி வகுப்பதாகவுள்ளது.கோவை நகரில் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே, மின்புதை வடம் அமைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக நகரின் வெவ்வேறு பகுதிகளிலும் அமைக்கும் திட்டத்தை, மின் வாரியம் செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தற்போது தடாகம் ரோட்டிலிருந்து, கவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் ஒன்றரை கி.மீ., துாரத்துக்கு மின்புதை வடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதற்காக, நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற்று, சாலை தோண்டுவதற்கு 38 லட்ச ரூபாய் மின் வாரியம் செலுத்தி, பணிகளை மேற்கொண்டு வருகிறது. கவுண்டம்பாளையம்-வடவள்ளி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் குழாய்க்கு, மிக அருகிலேயே இந்த மின் வடங்களும் புதைக்கப்படுகின்றன.எதிர்காலத்தில், குடிநீர்க் குழாய்களில் கசிவு, வெடிப்பு போன்ற பாதிப்பு ஏற்பட்டு, அதைச் சரி செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு, இப்பகுதியில் குழி தோண்டும்போது, புதை மின்வடம் சேதமாகவும், அதனால் ஏற்படும் மின்கசிவால் பலர் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.
குடிநீர்க் குழாய் பதிக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து, இரு புறமும் தலா இரண்டு அடி இடைவெளிக்குப் பின்பே, புதை மின் வடத்தை புதைக்க வேண்டியது அவசியம்.அப்போதுதான் அருகில் குழி தோண்டி, பணியாளர்கள் இறங்கி வேலை செய்ய எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். வழக்கமாக, புதை மின் வடத்தை, ஒன்றரை மீட்டர் ஆழத்தில், அதாவது ஐந்தடிக்கும் கீழேதான் புதைக்க வேண்டுமென்று, விதிகளில் கூறப்பட்டுள்ளது.ஆனால் கோவையில் அவிநாசி ரோடு மற்றும் திருச்சி ரோடு போன்ற பகுதிகளில், பல இடங்களில் அதற்கும் குறைவான ஆழத்தில், மின்புதை வடம் அமைக்கப்பட்டு உள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி ரோட்டில் சீரமைப்புப் பணிக்காக, ரோட்டைத் தோண்டிய போது, ரோடு தோண்டும் இயந்திரத்தின் முன் பகுதி கருகியது. அப்போதுதான் மிகவும் குறைவான ஆழத்தில், புதை மின் வடம் இருப்பது தெரியவந்தது.அவிநாசி ரோட்டில் கே.எம்.சி.எச்., அருகில் மிகவும் குறைவான ஆழத்தில், புதை மின் வடம் இருப்பதால், அப்பகுதியின் சாலையோரம் சீரமைக்கப்படாமலே உள்ளது.இந்நிலையில், இடையர்பாளையம் பகுதியில் நடக்கும் இந்த அரைகுறைப் பணி, அச்சத்தை ஏற்படுத்துவதாகவுள்ளது. இந்த ரோடு, மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளது. இதில் குடிநீர் குழாய் பதித்தது, குடிநீர் வடிகால் வாரியம்; பராமரிப்பது மாநகராட்சி. இப்போது அதில் மின் வாரியம் மின்புதை வடம் அமைக்கிறது. இந்த துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால், இப்படியொரு ஆபத்தான வேலை நடக்கிறது.
இது குறித்து, மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர்கள், மின் வாரியத்திடம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.அதற்கு, 'நீங்கள் ஏதாவது பணி செய்யும்போது. அப்பகுதியில் மின்சாரத்தை தடை செய்து விடுகிறோம்' என்று மின் வாரியப் பொறியாளர்கள் கூறியுள்ளனர்.இப்போது இந்த விவகாரத்தைப் பேசிய பொறியாளர்கள், மாறிச் சென்று விட்டால், எதிர்காலத்தில் வரும் அதிகாரிகளுக்கு இதுபற்றித் தெரிய வாய்ப்பில்லை. அப்போது சீரமைப்புப் பணி செய்யும் மாநகராட்சி அல்லது குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களின் உயிருக்கு, உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும்.

சில வேளை பொதுமக்களுக்கும் கூட, பாதிப்பு ஏற்படும் வாய்ப்புண்டு.எனவே உயிருடன் உரசும், இந்த காரியத்தை மின் வாரியம் நிறுத்துவதோடு, எவ்வளவு செலவானாலும் குடிநீர்க் குழாயிலிருந்து குறைந்தது மூன்றடி இடைவெளி விட்டு, இந்த புதை மின் வடத்தை அமைப்பது அவசியம்.இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இது தொடர்பாக, எந்தவொரு ஆபத்து, உயிரிழப்பு ஏற்பட்டாலும் அதற்கு மின் வாரிய அதிகாரிகளே, முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.
'குறித்துக் கொடுத்தது ஹைவேஸ்'
இது குறித்து, தமிழ்நாடு மின் பகிர்மானக்கழக கோவை (நகரம்) செயற்பொறியாளர் பசுபதியிடம் கேட்டதற்கு, ''மாநில நெடுஞ்சாலைத்துறை குறித்துக் கொடுத்த இடத்தில்தான், புதை மின் வடம் அமைக்கப்படுகிறது. குடிநீர் குழாய்க்கு மிக அருகில் இருப்பதாகத் தெரியவந்தால், கண்டிப்பாக அதை மாற்றி விட்டு, பாதுகாப்பான இடத்தில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X