பிரதமர் மோடிக்கு பா.ஜ., கடமைப்பட்டிருக்கிறது: சஞ்சய் ராவத்

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
மும்பை: மாநில தேர்தல்களுக்கு மோடியின் பிம்பத்தை மட்டும் நம்பாமல் உள்ளூர் தலைவர்களை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., விரும்புவதாக வெளியான செய்திக்கு பதிலளித்த சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், “பா.ஜ., தனது வெற்றிக்காக மோடிக்கு கடமைப்பட்டுள்ளது” என்றார்.மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தார். மராத்தா இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை
Narendra Modi, top leader, Sanjay Raut, BJP, Shiv Sena

மும்பை: மாநில தேர்தல்களுக்கு மோடியின் பிம்பத்தை மட்டும் நம்பாமல் உள்ளூர் தலைவர்களை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., விரும்புவதாக வெளியான செய்திக்கு பதிலளித்த சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், “பா.ஜ., தனது வெற்றிக்காக மோடிக்கு கடமைப்பட்டுள்ளது” என்றார்.

மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தார். மராத்தா இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிரச்னையை பற்றி அவர்கள் விவாதித்தனர். இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் பா.ஜ., உடன் நெருக்கமாகிறதா சிவசேனா என்ற கேள்வி எழுந்தது.

முதல்வர் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், “நாங்கள் அரசியல் ரீதியாக வேண்டுமானால் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக எங்கள் உறவு முறிந்துவிட்டதாக அர்த்தமில்லை.” என கூறினார். சிவசேனா கட்சி இதழான சாம்னா, இது அரசியல் காரணங்களுக்கான சந்திப்பில்லை என்றது.


latest tamil newsஇந்நிலையில் சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்திடம், வாக்களர்களிடம் பிரதமருக்கு உள்ள செல்வாக்கு, மாநிலங்களில் உள்ளூர் தலைவர்களை முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ்., விரும்புவது போன்ற ஊகங்கள் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “ இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அது பற்றி அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை. ஊடக செய்திகளை நான் கண்டுகொள்வதில்லை. கடந்த 7 ஆண்டுகளில் பாஜக அதன் வெற்றிக்காக நரேந்திர மோடிக்கு கடமைப்பட்டிருக்கிறது. அவர் தான் நாட்டுக்கும், அக்கட்சிக்கும் உயரிய தலைவர்.” என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
11-ஜூன்-202120:47:52 IST Report Abuse
RajanRajan நீங்களும் தான் அந்த தேசியவாத சரத்துக்கு கடமையோ கடனோ பட்டிருக்கிறீர்கள். நல்ல பஜனை பண்ணுற போ.
Rate this:
Cancel
11-ஜூன்-202115:37:10 IST Report Abuse
தமிழன் நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா
Rate this:
Cancel
ktkswami - delhi,இந்தியா
11-ஜூன்-202114:14:27 IST Report Abuse
ktkswami Andhar balti adippathiu sangikalukku kai vantha kkalai thaan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X