அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் வீடு தேடி வரும் டோக்கன்! உணவுத்துறை அமைச்சர் தகவல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கோவை;''கொரோனா நிவாரணம் இரண்டாம் தவணை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன், வீடு வீடாக வழங்கப்படும்,'' என்று, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.கோவை மாநகரில் 7 ரேஷன் கடைகளில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.ரேஷன் பொருள் வாங்க காத்திருந்த பொதுமக்களிடம், கடையின் செயல்பாடுகள் பற்றி விசாரித்தார். முதியோருக்கு
 இன்று முதல் வீடு தேடி வரும் டோக்கன்! உணவுத்துறை அமைச்சர் தகவல்

கோவை;''கொரோனா நிவாரணம் இரண்டாம் தவணை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன், வீடு வீடாக வழங்கப்படும்,'' என்று, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.கோவை மாநகரில் 7 ரேஷன் கடைகளில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.ரேஷன் பொருள் வாங்க காத்திருந்த பொதுமக்களிடம், கடையின் செயல்பாடுகள் பற்றி விசாரித்தார். முதியோருக்கு முன்னுரிமை அடிப்படையில், பிரத்யேக வரிசை ஏற்படுத்தி தரவும் உத்தரவிட்டார்.அரசின் நிவாரண தொகை, பொது வினியோக பொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா என, பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அரிசியின் எடை சரியாக உள்ளதா என்று பார்த்தார்.இதன் பின், அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், ''அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், கொரோனா இரண்டாம் நிவாரண தொகை மற்றும் 405 ரூபாய் மதிப்புள்ள, அத்தியாவசிய பொருட்களை, அனைத்து கார்டுதாரர்களுக்கும் வினியோகிப்பதற்கான டோக்கன், இன்று முதல் 14ம் தேதி வரை வீடு, வீடாக வழங்கப்படும். டோக்கனில் தெரிவித்துள்ள நாளில், இரண்டாம் தவணை தொகையும், அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படும்,'' என்றார்.கலெக்டர் நாகராஜன், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் பிரசன்னா ராமசாமி, கூட்டுறவு இணைப்பதிவாளர் பழனிசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X