பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்திய 632 பகுதிகளில் கபசுர குடிநீர்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கோவை:கோவையில், தனிமைப்படுத்திய பகுதியில் வசிப்போருக்கு, மாநகராட்சி சார்பில் சத்து மாத்திரை மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.கோவை மாவட்டத்தில், மாநகராட்சி பகுதியில் மட்டும் கொரோனா பரவல், 56 சதவீதமாக இருக்கிறது. கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில், பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கட்டுமான பணியாளர்கள் கூட்டம், கூட்டமாக சென்று வருகின்றனர்.

கோவை:கோவையில், தனிமைப்படுத்திய பகுதியில் வசிப்போருக்கு, மாநகராட்சி சார்பில் சத்து மாத்திரை மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.கோவை மாவட்டத்தில், மாநகராட்சி பகுதியில் மட்டும் கொரோனா பரவல், 56 சதவீதமாக இருக்கிறது. கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில், பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கட்டுமான பணியாளர்கள் கூட்டம், கூட்டமாக சென்று வருகின்றனர். மொத்த மார்க்கெட்டுகளுக்கு காய்கறி, மளிகை வாங்க சில்லரை வியாபாரிகள், திரளாக வருகின்றனர்.தடையை மீறி தொழிற்சாலைகள் இயக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களாக, அனுமதியற்ற கடைகளும் கூட திறக்கப்பட்டு வருகின்றன. போலீசாரோ, அரசு அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர்.மாநகராட்சி பகுதியில் மட்டும், 632 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தகர ஷீட்டால் மறைப்பு ஏற்படுத்தி, பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் வசிப்போருக்கு சத்து மாத்திரையும், 14 நாட்கள் தொடர்ந்து, கபசுர குடிநீரும் வழங்க, மண்டலத்துக்கு, 20 கிலோ வீதம், 100 கிலோ கபசுர பொடி கொள்முதல் செய்து, மண்டல சுகாதார அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. வீடு வீடாகச் சென்று, குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.இதேபோல், பரிசோதனைக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டவர்களின் வீடுகளில் வசிப்போருக்கு, சத்து மாத்திரை வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X