பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு மாதமாக சம்பளம் கிடைக்கலை: மாநகராட்சி இரவு காவலர்கள் கண்ணீர்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் இரவு காவலர்களுக்கு, 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதேபோல், ஒப்பந்த டிரைவர், கிளீனர்களுக்கும் இரு மாதங்களாக சம்பளம் வழங்காத அவலம் நீடிக்கிறது.கோவை மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்கள் நியமித்திருப்பதுபோல், பள்ளிகளில் இரவு காவலர்களும், அதிகாரிகள் வாகனங்கள் மற்றும் குப்பை அள்ளும் வண்டிகளுக்கு

கோவை:கோவை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் இரவு காவலர்களுக்கு, 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதேபோல், ஒப்பந்த டிரைவர், கிளீனர்களுக்கும் இரு மாதங்களாக சம்பளம் வழங்காத அவலம் நீடிக்கிறது.கோவை மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்கள் நியமித்திருப்பதுபோல், பள்ளிகளில் இரவு காவலர்களும், அதிகாரிகள் வாகனங்கள் மற்றும் குப்பை அள்ளும் வண்டிகளுக்கு டிரைவர், கிளீனர்களும் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களில், டிரைவர், கிளீனர்களுக்கு இரு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இரவு காவலர்களுக்கு, பிப்., முதல் நான்கு மாத சம்பளம் வழங்கவில்லை. இதன் காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவ உதவிக்கு கூட, பொருளாதார வசதியின்றி தவிக்கின்றனர்.மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டால், சம்பளம் கொடுப்பதை பற்றி எதுவும் தெரிவிக்காமல், ஒப்பந்ததாரரை கேளுங்கள் என, திருப்பி அனுப்புகின்றனர்.நிரந்தர பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்குவதுபோல், ஒப்பந்த பணியாளர்களுக்கும் மாதந்தோறும் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X