பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட்டுகளில் திரளும் கூட்டம்: கொரோனா மேலும் பரவ வாய்ப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டுகளில், தினந்தோறும் அதிக கூட்டம் திரள்வதால், கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கோவையில் மொத்த கொள்முதல் மளிகை மார்க்கெட்டுகள், இரவு, 10:00 முதல் காலை, 5:00 மணி வரை, காய்கறி மார்க்கெட்டுகள், காலை, 3:00 முதல், 7:00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டுமென, மாநகராட்சி அறிவித்துள்ளது.திரளாக கூட்டம் கூடுவதை தவிர்க்க,
 மார்க்கெட்டுகளில் திரளும் கூட்டம்: கொரோனா மேலும் பரவ வாய்ப்பு

கோவை:கோவையில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டுகளில், தினந்தோறும் அதிக கூட்டம் திரள்வதால், கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கோவையில் மொத்த கொள்முதல் மளிகை மார்க்கெட்டுகள், இரவு, 10:00 முதல் காலை, 5:00 மணி வரை, காய்கறி மார்க்கெட்டுகள், காலை, 3:00 முதல், 7:00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டுமென, மாநகராட்சி அறிவித்துள்ளது.திரளாக கூட்டம் கூடுவதை தவிர்க்க, மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர்., மார்க்கெட் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. எதிரே உள்ள பஸ் ஸ்டாண்ட் வளாகம் மற்றும் துடியலுார் வாரச்சந்தைக்கு பிரிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், அதிக வியாபாரிகள் வாகனங்களில் வருவதால், நெருக்கடியான சூழல் காணப்படுகிறது. அதனால், மாநகராட்சி ஊழியர் ஒருவர், 'இங்கு சில்லரை வியாபாரம் கிடையாது; வியாபாரிகளுக்கு மட்டுமே விற்கப்படுகிறது' என அறிவிப்பு செய்த வண்ணம் இருக்கிறார்.அதிகாலையே போலீசார் வந்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேநேரம், உக்கடம் ராமர் கோவில் மார்க்கெட் நிலைமை தலைகீழாக இருக்கிறது; காய்கறி வாங்க வருவோர் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இது, தொற்று பரவலுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.கொரோனா முதல் அலை பரவியபோது, உக்கடம் பஸ் ஸ்டாண்ட், காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், வெளியூர் பஸ் ஸ்டாண்ட்டுகளுக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது.அதேபோல், தற்போதும் மார்க்கெட் வியாபாரிகளை தனித்தனியாக பிரித்து, இடங்களை மாற்றினால் மட்டுமே, தொற்று மேலும் பரவாமல் தடுக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X