சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் டயர் வெடித்து விபத்து: போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் இன்ஸ்பெக்டர் இறந்தார்.திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 56; சென்னை, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை பட்டாலியனில் பண்டகப் பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.கடந்த ஒரு மாதத்திற்கு முன் இவரது தாயார் இறந்து விட்டார்.

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் இன்ஸ்பெக்டர் இறந்தார்.திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 56; சென்னை, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை பட்டாலியனில் பண்டகப் பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.கடந்த ஒரு மாதத்திற்கு முன் இவரது தாயார் இறந்து விட்டார். தாயாரின் இறப்பு காரியங்களை முடித்து விட்டு இன்று 11ம் தேதி பணியில் சேர இருந்ததால், அம்பாசமுத்திரத்தில் இருந்து சென்னைக்கு நேற்று காலை, 'டிஎன் 18 டி 8075' மாருதி சுசுகி காரில் புறப்பட்டார்.மதியம் 2:45 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, எறஞ்சி அருகே மேம்பாலத்தில் வந்தபோது, காரின் முன் பக்க வலது டயர் வெடித்தது.இதனால், கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி சாலையில் உருண்ட கார், முன்னால் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் காரை ஓட்டிச் சென்ற ராமகிருஷ்ணன், பைக்கில் சென்ற கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வடக்குப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 30; லட்சுமணன், 35; ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.எடைக்கல் போலீசார், விபத்தில் சிக்கிய மூவரையும் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதித்ததில் ராமகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X