கோவை;'கோவை, நஞ்சுண்டாபுரத்தில் கொரோனா தொற்றால் அதிகமானோர் இறந்ததாக, வதந்தி பரப்புவோர் மீது, நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்' என, கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உருமாறிய கொரோனா பாதிப்பு, நஞ்சுண்டாபுரத்தில் அதிகமாக பரவியுள்ளதாகவும், அப்பகுதியில் பலர் இறந்துள்ளதாகவும், பொய்யான தகவலை சிலர் பரப்பி வருகின்றனர்.நஞ்சுண்டாபுரத்தில் இதுவரை, 650 பேருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. கடந்த, 10 நாட்களில், 56 நபர்களுக்கு மட்டும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல், மயக்கம், அதிக சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு இருப்போரை கண்டறிந்து, தேவையான மருத்துவ வசதி மற்றும் உதவிகள் உடனுக்குடன் செய்யப்பட்டு வருகின்றன.அதனால, வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். பொய்யான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, கமிஷனர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE