கோவில் நிலம் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு துவக்கம் | Dinamalar

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு துவக்கம்

Added : ஜூன் 11, 2021 | |
கோவை:கோவை மண்டல அறநிலையத்துறைக்குட்பட்ட கோவிலுக்கு, சொந்தமான அசையும், அசையா சொத்து மற்றும் ஆக்கிரமிப்பிலுள்ள சொத்துக்கள் குறித்த கணக்கெடுப்பு துவங்கியது.கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட பட்டியல் மற்றும் பட்டியல் சாராத கோவிலுக்கு, சொந்தமான அசையும், அசையா சொத்துக்கள் குறித்த விபரப்படி, ஆக்கிரமிப்பிலுள்ள சொத்துக்கள் குறித்தும், நியாய வாடகை

கோவை:கோவை மண்டல அறநிலையத்துறைக்குட்பட்ட கோவிலுக்கு, சொந்தமான அசையும், அசையா சொத்து மற்றும் ஆக்கிரமிப்பிலுள்ள சொத்துக்கள் குறித்த கணக்கெடுப்பு துவங்கியது.கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட பட்டியல் மற்றும் பட்டியல் சாராத கோவிலுக்கு, சொந்தமான அசையும், அசையா சொத்துக்கள் குறித்த விபரப்படி, ஆக்கிரமிப்பிலுள்ள சொத்துக்கள் குறித்தும், நியாய வாடகை செலுத்தாத விபரங்கள் குறித்தும் கணக்கெடுக்க, கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில்வேலவன் அறிவுறுத்தியுள்ளார்.அதன் அடிப்படையில், அறநிலையத்துறை ஆய்வர்கள் மற்றும் செயல் அலுவலர்கள், பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின், ஆக்கிரமிப்பு மீட்கும் பணி நடக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X