பொது செய்தி

தமிழ்நாடு

துணை மின் நிலையத்தில் தீ 100 கிராமங்கள் இருளில் மூழ்கின

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை துணை மின் நிலையத்தில் தீப்பிடித்ததால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எம்.எஸ்.தக்கா பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து, உளுந்துார்பேட்டை, பிள்ளையார்குப்பம் மற்றும் பல்வேறு கிராம பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.நேற்று மாலை 5:45 மணியளவில் துணை

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை துணை மின் நிலையத்தில் தீப்பிடித்ததால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எம்.எஸ்.தக்கா பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து, உளுந்துார்பேட்டை, பிள்ளையார்குப்பம் மற்றும் பல்வேறு கிராம பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.நேற்று மாலை 5:45 மணியளவில் துணை மின் நிலையத்தில் திடீரென மின்கம்பி அறுந்து தீப்பிடித்து எரியத் துவங்கியது. உடன் மின்வாரிய ஊழியர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த தீ விபத்தால் உளுந்துார்பேட்டை பேரூராட்சி, மூலசமுத்திரம், பு.கொணலவாடி, வெள்ளையூர், ஆர்.ஆர்.குப்பம், குமாரமங்கலம், பிள்ளையார்குப்பம் உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.மின்வாரிய ஊழியர்களின் முயற்சியால் 2 மணி நேரத்திற்கு பிறகு இரவு 7:50 மணியளவில் உளுந்துார்பேட்டைக்கு மின் விநியோகம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து பிற பகுதிகளுக்கும் படிப்படியாக மின் விநியோகம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X