சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடனை திரும்ப பெற குழந்தையை கடத்திய கோவை வாலிபர் கைது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
வடவள்ளி:கடனை திரும்ப பெற, குழந்தையை கடத்திய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்; குழந்தையை பத்திரமாக மீட்டனர்.கோவை, வடவள்ளி, வேம்பு அவன்யூவை சேர்ந்தவர் சரவணகுமார், 23. இவருக்கும், தர்மபுரியை சேர்ந்த பெண்ணுக்கும், சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண், சரவணகுமாரிடம், 1.50 லட்சம் ரூபாய் பெற்று, தனது கணவனுக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார்.இந்நிலையில், சரவணகுமார்,
 கடனை திரும்ப பெற குழந்தையை கடத்திய கோவை வாலிபர் கைது

வடவள்ளி:கடனை திரும்ப பெற, குழந்தையை கடத்திய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்; குழந்தையை பத்திரமாக மீட்டனர்.கோவை, வடவள்ளி, வேம்பு அவன்யூவை சேர்ந்தவர் சரவணகுமார், 23. இவருக்கும், தர்மபுரியை சேர்ந்த பெண்ணுக்கும், சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண், சரவணகுமாரிடம், 1.50 லட்சம் ரூபாய் பெற்று, தனது கணவனுக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார்.இந்நிலையில், சரவணகுமார், தர்மபுரியில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்று, கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்பெண், கால அவகாசம் கேட்டுள்ளார். அப்பெண் அறைக்குள் சென்ற நேரத்தில், அவரது ஏழு வயது மகனை தூக்கிக்கொண்டு, சரவணகுமார் வெளியேறினார்.அப்பெண் தர்மபுரி போலீசில் அளித்த கடத்தல் புகாரின்படி, வழக்குப்பதிவு செய்த தர்மபுரி போலீசார், சிறுவனையும், சரவணகுமாரையும் தீவிரமாக தேடி வந்தனர். சரவணகுமார் கோவை, வடவள்ளியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.கோவை வந்த தனிப்படையினர், வடவள்ளி இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஐ., சேகர் உதவியுடன், சரவணனகுமாரை கைது செய்து, சிறுவனையும் பத்திரமாக மீட்டனர். விசாரணைக்காக, சிறுவனையும், சரவணகுமாரையும் தனிப்படை போலீசார், தர்மபுரிக்கு அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X