சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் அருகே கார் விபத்து சிறைத்துறை டி.ஐ.ஜி., தப்பினார்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் அருகே சாலையோர தடுப்பு கட்டையில் கார் மோதிய விபத்தில் மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி., உட்பட மூவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி. இவர், பணி நிமித்தமாக நேற்று மதியம் மதுரையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இனோவா காரில் சென்று கொண்டிருந்தார்.காரை மதுரையைச் சேர்ந்த வீரசேரன் என்பவர் ஓட்டி வந்தார். காரில் ஒரு பாதுகாவலரும்

திண்டிவனம்-திண்டிவனம் அருகே சாலையோர தடுப்பு கட்டையில் கார் மோதிய விபத்தில் மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி., உட்பட மூவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி. இவர், பணி நிமித்தமாக நேற்று மதியம் மதுரையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இனோவா காரில் சென்று கொண்டிருந்தார்.காரை மதுரையைச் சேர்ந்த வீரசேரன் என்பவர் ஓட்டி வந்தார். காரில் ஒரு பாதுகாவலரும் வந்தார்.மாலை 5:30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒரத்தி கிராமம் சாலை சந்திப்பில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர கல்வெர்ட் தடுப்புச் சுவரில் மோதி, விபத்துக்குள்ளானது.இதில், டி.ஐ.ஜி., பழனி உட்பட மூவரும் சிறு காயமின்றி அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.தகவலறிந்த ரோஷணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, டி.ஐ.ஜி., பழனியை மாற்று காரில் காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய காரை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X