பொது செய்தி

தமிழ்நாடு

பலியான துாய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ. 2.5 லட்சம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:இக்கரைபோளுவாம்பட்டியில், விபத்தில் உயிரிழந்த இரு தூய்மை பணியாளர்களின் குடும்பத்திற்கு, தலா, 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது.இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், 10 பேர், 8ம் தேதி பணி முடித்து, ஊராட்சி அலுவலகத்திற்கு குப்பை அள்ளும் மூன்று சக்கர பேட்டரி வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாகனம் கட்டுப்பாட்டை
 பலியான துாய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ. 2.5 லட்சம்

தொண்டாமுத்தூர்:இக்கரைபோளுவாம்பட்டியில், விபத்தில் உயிரிழந்த இரு தூய்மை பணியாளர்களின் குடும்பத்திற்கு, தலா, 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது.இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், 10 பேர், 8ம் தேதி பணி முடித்து, ஊராட்சி அலுவலகத்திற்கு குப்பை அள்ளும் மூன்று சக்கர பேட்டரி வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, நொய்யல் பாலத்தில் இருந்து, 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.இதில், போளுவாம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி, செம்மேடு சேர்ந்த பழனிசாமி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாவட்ட நிர்வாகம் சார்பில், உயிரிழந்த இரு தூய்மை பணியாளர்களின் குடும்பத்திற்கு, தலா, 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கபட்டது. இழப்பீட்டு தொகைக்கான காசோலையை, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X