தமிழ்நாடு

நோய் பயம் துளியும் இல்லையே

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் கடைவீதிகளில் தொற்று பயம் துளியும் இன்றி பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படுவதால் கொரோனா பரவலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லை பொறுத்தவரை பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி விட்டது. மே யில் உச்சத்தில் இருந்த கொரோனா தற்போது மெல்ல மெல்ல

திண்டுக்கல் : திண்டுக்கல் கடைவீதிகளில் தொற்று பயம் துளியும் இன்றி பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படுவதால் கொரோனா பரவலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லை பொறுத்தவரை பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி விட்டது. மே யில் உச்சத்தில் இருந்த கொரோனா தற்போது மெல்ல மெல்ல குறைகிறது. பொதுமக்களோ தளர்வை சரியாக பயன்படுத்துவதில்லை.கடைகள், வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. அதை கண்காணிக்கவும் ஆட்களில்லை.

குறிப்பிட்ட கடைகளையே திறக்கலாம் என வழிகாட்டுதலை வெளியிட்டும் பின்பற்றவில்லை. ஜவுளி, பர்னிச்சர், நகைக்கடை என பலவும் புறவாசல் அல்லது பாதி திறந்த நிலையில் பொதுமக்களை வியாபாரத்திற்கு இழுக்கின்றனர்.கூட்டமாக உள்ளே நுழைவோர் பொருட்களை வாங்கி விட்டு அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாத நேரத்தில் கடைகளை விட்டு வெளியே வருகின்றனர்.

மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்தாலும் இறப்போரின் எண்ணிக்கை குறையவில்லை. தற்போது அறிகுறி தெரியாமல் நேரடியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அலட்சியம் காட்டினால் மீண்டும் முழுஊரடங்கிற்கே வழிவகுக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X