பொது செய்தி

தமிழ்நாடு

50 சதவீத மானியத்தில் விதை நெல் விற்பனை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கம்பம் : ''கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடிக்கு தேவையான கோ 51 விதை நெல் 50 சதவீத மானியத்தில் விற்பனைக்கு உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்பெற வேண்டும்,'என, கம்பம் வேளாண் உதவி இயக்குநர் சின்னக்கண்ணு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் விதை கிராம திட்டத்தின் கீழ் இந்த பருவத்திற்கு ஏற்ற கோ 51 விதைநெல் விற்பனைக்கு தேவையான அளவு

கம்பம் : ''கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடிக்கு தேவையான கோ 51 விதை நெல் 50 சதவீத மானியத்தில் விற்பனைக்கு உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்பெற வேண்டும்,'என, கம்பம் வேளாண் உதவி இயக்குநர் சின்னக்கண்ணு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் விதை கிராம திட்டத்தின் கீழ் இந்த பருவத்திற்கு ஏற்ற கோ 51 விதைநெல் விற்பனைக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது. 50 சதவீத மானியத்தில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். நெல், நிலக்கடலை, தென்னை, பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களுக்கு தேவையான நுண்ணுாட்ட உரங்கள், பேரூட்ட சத்துகள் அடங்கிய உரங்களை இடுவதுடன் வெவ்வேறு பயிர்களுக்குரிய நுண்ணுாட்ட உரங்களை சிபாரிசு செய்யும் அளவு இடுவதால், கூடுதல் மகசூல் கிடைக்கும். இதற்கு கம்பம் மற்றும் கூடலுார் வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X