பொது செய்தி

தமிழ்நாடு

சலுான்களை திறக்க வலியுறுத்தல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'சலுான் கடைகளை திறக்க அனுமதிக்க கோரி' தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் அளித்த மனு: கொரோனா ஊரடங்கால் கடந்த ஒன்றரை மாதங்களாக சலுான் தொழிலாளர்கள் பரிதாப சூழ்நிலையில் உள்ளனர். கடை, வீடு வாடகை, மின் கட்டணம், குடும்ப செலவுகளை சமாளிக்க

திண்டுக்கல் : 'சலுான் கடைகளை திறக்க அனுமதிக்க கோரி' தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.

மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் அளித்த மனு: கொரோனா ஊரடங்கால் கடந்த ஒன்றரை மாதங்களாக சலுான் தொழிலாளர்கள் பரிதாப சூழ்நிலையில் உள்ளனர். கடை, வீடு வாடகை, மின் கட்டணம், குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.மாவட்டம் முழுதும் 5 ஆயிரம் சலுான் கடைகள் உள்ளன. இதை நம்பி 20 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன. அரசு நிவாரண உதவி அல்லது பகுதி நேரமாக காலை 7:00 முதல் பகல் 12:00 மணி வரை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சலுான்களை திறக்க அனுமதிக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X