பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனைகளில் பணிபுரிய இலவச பயிற்சிக்கு வரவேற்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கோவை:கொரோனா பேரிடர் காலத்தில், அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் சேரலாம் என்று, கோவை கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி, கல்வீரம்பாளையம் ஆறுதல் பவுண்டேஷன் வளாகத்தில் (எண் 68, மருதமலை சாலை, கல்வீரம்பாளையம், கோவை)

கோவை:கொரோனா பேரிடர் காலத்தில், அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் சேரலாம் என்று, கோவை கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி, கல்வீரம்பாளையம் ஆறுதல் பவுண்டேஷன் வளாகத்தில் (எண் 68, மருதமலை சாலை, கல்வீரம்பாளையம், கோவை) அளிக்கப்படும்.கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில், ஈடுபட ஆர்வமுள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் கல்வித்தகுதியுடன், 18 வயது பூர்த்தியடைந்த இரு பாலரும், பயிற்சியில் சேரலாம்.கல்வித்தகுதி அசல் ஆவணங்கள், ஆதார் விவரங்களுடன், 88707 70882, 90803 48505 ஆகிய போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலகத்துக்கு, dad.tncbe@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும், தகவல்களை அனுப்பி வைக்கலாம்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X