பொது செய்தி

தமிழ்நாடு

பாலம் வேலை முடிந்தும் ரோட்டை இணைக்கும் பணி தாமதம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
தேனி : தென்கரை பேரூராட்சியில் சிறுபாலங்கள் வேலை முடிந்தும் ரோட்டை இணைக்கும் பணி மேற்கொள்ளாததால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி முதல்வார்டு பாரதிநகர். நகரின் விரிவாக்க பகுதியானதால் அதிக குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாக்கடை, சிறுபாலம், ரோடுவசதிக்கு ரூ. 1.50 கோடி நிதிஒதுக்கீடு செய்து சட்டசபை தேர்தலுக்கு முன் பணி துவங்கின. இதில்

தேனி : தென்கரை பேரூராட்சியில் சிறுபாலங்கள் வேலை முடிந்தும் ரோட்டை இணைக்கும் பணி மேற்கொள்ளாததால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி முதல்வார்டு பாரதிநகர். நகரின் விரிவாக்க பகுதியானதால் அதிக குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாக்கடை, சிறுபாலம், ரோடுவசதிக்கு ரூ. 1.50 கோடி நிதிஒதுக்கீடு செய்து சட்டசபை தேர்தலுக்கு முன் பணி துவங்கின. இதில் சாக்கடையும், 10 தெருக்களுக்கு கான்கிரீட் சிறுபாலம் அமைக்கப்பட்டது. பால வேலை முடிந்து 2 மாதம் ஆகியும் அதனை மண்கொட்டி ரோட்டுடன் இணைக்கும் பணியை மேற்கொள்ளாமல் மந்தமாக பணி நடக்கிறது.

ஒருசில இடங்களில் பாலம் பணி நிறைவு பெறாததால் அப்பகுதியினர் வாகனங்களை வீடுகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் ரோட்டில் பாதுகாப்பு இன்றி விட்டு செல்கின்றனர். முதியோர், பெண்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் அனைத்து தெருக்களும் சேறும் ,சகதியுமாகி சிரமப்படுகின்றனர். பாலம் பணிகளை முடிக்கும் வகையில் பாதியில் நிற்கும் சாக்கடை பணிகளை விரைந்துமுடிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X