பொது செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கோவை;தமிழக முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்து, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று, கோவை கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு பெண் குழந்தை மட்டும்

கோவை;தமிழக முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்து, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று, கோவை கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், 50 ஆயிரம் ரூபாய், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால், தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகையாக செலுத்தப்படும்.குழந்தைகளுக்கு 18 வயதான பிறகு முதிர்வுத்தொகை, வட்டியுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற, இரண்டாம் பெண் குழந்தை பிறந்து, மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.குழந்தைகளின் தாயார், குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஆண்டு வருமானச்சான்று 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருப்பதற்கான சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு விண்ணப்பித்து அசல் வைப்பு நிதி பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில், 18 வயது முதிர்வடைந்தவர்கள், முதிர்வுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சமூக நல விரிவு அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர்களிடம் இதற்கான விண்ணப்பம் தரலாம்.அசல் வைப்பு நிதி பத்திரம், பயனாளியின் போட்டோ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல், பயனாளி பெயரில் தனி வங்கிக்கணக்கு புத்தக நகல், ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X