பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனை மையம் அமைக்க அமைச்சருக்கு கோரிக்கை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கம்பம் : விவசாயிகள் கேரள ஏலத்தோட்டங்களுக்கு சென்று வர கொரோனா பரிசோதனை மையம் அமைத்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பத்தில் உள்ள கேரள கார்டமம் குரோயர்ஸ் யூனியன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.தலைவர் உதயகுமார், செயலாளர் சதாசிவசுப்ரமணியன் கூறியிருப்பதாவது :கம்பம் பகுதியிலிருந்து சென்றுகேரளா இடுக்கி

கம்பம் : விவசாயிகள் கேரள ஏலத்தோட்டங்களுக்கு சென்று வர கொரோனா பரிசோதனை மையம் அமைத்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பத்தில் உள்ள கேரள கார்டமம் குரோயர்ஸ் யூனியன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தலைவர் உதயகுமார், செயலாளர் சதாசிவசுப்ரமணியன் கூறியிருப்பதாவது :கம்பம் பகுதியிலிருந்து சென்றுகேரளா இடுக்கி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் ஏலக்காய் சாகுபடி செய்து வருகிறோம். கொரோனா முதல் அலையின்போது இருமாநில 'இ பதிவு 'செய்து ஏலத்தோட்டங்களுக்கு சென்று வந்தோம். தற்போது கொரோனா பாதிப்பில்லை என சான்றிதழ் கொண்டுவந்தால்தான் அனுமதிப்போம் என கேரள அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

எனவே கம்பத்தில் ஏல விவசாயிகளுக்காக மையம் அமைத்து கொரோனா பரிசோதனை செய்து பாதிப்பில்லை எனில் அதுகுறித்த சான்றிதழ் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் சீசனில் ஏல விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X