பொது செய்தி

தமிழ்நாடு

4 மருந்தகங்களின் உரிமம் ரத்து மருந்துகள் ஆய்வாளர் அதிரடி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் பகுதியில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்கிய 4 மெடிக்கல் உரிமத்தை தற்காலிகமாக சுகாதாரத்துறையினர் ரத்து செய்தனர்.கடலுார் மாவட்டத்தில் மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருந்து சீட்டுகள் இல்லாமல் மெடிக்கல்களில் பொது மக்கள் மருந்துகள் வாங்குகின்றனர். இதை தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர்

விருத்தாசலம்-விருத்தாசலம் பகுதியில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்கிய 4 மெடிக்கல் உரிமத்தை தற்காலிகமாக சுகாதாரத்துறையினர் ரத்து செய்தனர்.கடலுார் மாவட்டத்தில் மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருந்து சீட்டுகள் இல்லாமல் மெடிக்கல்களில் பொது மக்கள் மருந்துகள் வாங்குகின்றனர். இதை தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில், விருத்தாசலம் மருந்துகள் ஆய்வாளர் நாராயணன் விருத்தாசலம் பகுதியில் உள்ள மெடிக்கல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தாலுகாவில் 4 மெடிக்கல்களில் மருந்து வழங்கியது தெரிந்தது. இதையடுத்து, 4 மெடிக்கல்கள் குறித்து விழுப்புரம் உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் (பொறுப்பு) ரவிக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் 4 மெடிக்கல்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.மருந்துகள் ஆய்வாளர் நாராயணன் கூறுகையில் ' சளி, காய்ச்சல் இருந்தால் பொதுமக்கள் பலர் மெடிக்கலில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சுயமாக மருத்துவம் பார்த்துக் கொள்கின்றனர். கொரோனா பாதிப்பு தெரியாமலேயே பலர் மருந்துகள் வாங்கி பயன்படுத்தி, உயிரிழப்புகள் ஏற்படுகிறது.மேலும், விருத்தாசலம் பகுதிகளில் மெடிக்கலில் காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், பசியின்மை, உடல் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளிடம் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X