சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் திருமண தம்பதி துாக்கிட்டு தற்கொலை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் அருகே, காதல் திருமண தம்பதி, துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த கண்டமங்கலம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் மணி, 26; செங்கல் சூளைத் தொழிலாளி. இவரது மனைவி சவிதா, 25; இவர்கள் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.சவிதா 40 நாட்கள் கர்ப்பிணியாக இருந்த நிலையில்,

விழுப்புரம்-விழுப்புரம் அருகே, காதல் திருமண தம்பதி, துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த கண்டமங்கலம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் மணி, 26; செங்கல் சூளைத் தொழிலாளி. இவரது மனைவி சவிதா, 25; இவர்கள் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.சவிதா 40 நாட்கள் கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் கரு கலைந்தது. இதனால், இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, மணி துாக்கில் தொங்கி இறந்த நிலையிலும், கீழே சவிதா இறந்து கிடந்ததும் தெரியவந்தது.கண்டமங்கலம் போலீசார் இருவரது உடலையும் மீட்டு விசாரணை நடத்தினர்.முதல் கட்ட விசாரணையில், கரு கலைந்ததால் மன உளைச்சலில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.இதுகுறித்து சவிதாவின் தம்பி நவமால்மருதுாரைச் சேர்ந்த மதுர முத்து மகன் ரஞ்சித் குமார், 22; கொடுத்த புகாரின் பேரில், சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X