அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவை வனக்கல்லுாரியில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கோவை:வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவை வனக்கல்லுாரி மற்றும் வன உயர் பயிற்சியகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.வன ஆராய்ச்சிப்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட, மேம்பாட்டு நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் முன்னிட்டு, மரக்கன்று நடவு செய்தார்.வன பாதுகாப்பு படை செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார். அடிபட்ட பறவைகள்

கோவை:வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவை வனக்கல்லுாரி மற்றும் வன உயர் பயிற்சியகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.வன ஆராய்ச்சிப்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட, மேம்பாட்டு நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் முன்னிட்டு, மரக்கன்று நடவு செய்தார்.வன பாதுகாப்பு படை செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார். அடிபட்ட பறவைகள் காப்பாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவதை கேட்டறிந்த அமைச்சர், சிகிச்சையில் மீண்ட 10 கிளிகளை கூண்டில் இருந்து திறந்து விட்டார்.வன விரிவாக்க நாற்றங்காலில் ஆய்வு செய்த அமைச்சர் ராமச்சந்திரன், இரு விவசாயிகளுக்கு தலா, 250 நாற்றுகளை வழங்கினார். இடர்பாடுகளில் சிக்கிய மனிதர்கள், விலங்குகளை மீட்பதற்காக உருவாக்கப்பட்ட ஆல்பா, பீட்டா குழுக்களின் செயல்முறை பயிற்சியையும் பார்வையிட்டார்.வன உயர் பயிற்சியக கூடுதல் இயக்குனர் திருநாவுக்கரசு, கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் அன்வர்தீன், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், துணை வன பாதுகாவலர் வித்யா, வனத்துறை அலுவலர்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X