சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி விபத்து: கர்ப்பிணி உட்பட 3 பெண்கள் பலி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அருகே 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதிய விபத்தில் பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி உட்பட மூன்று பெண்கள் இறந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 34; நெல் அறுவடை இயந்திர உரிமையாளர். இவரது மனைவி ஜெயலட்சுமி, 24; இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.நிறைமாத கர்ப்பிணியான

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அருகே 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதிய விபத்தில் பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி உட்பட மூன்று பெண்கள் இறந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 34; நெல் அறுவடை இயந்திர உரிமையாளர். இவரது மனைவி ஜெயலட்சுமி, 24; இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமிக்கு நேற்று அதிகாலை 3:00 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடன் அவரது குடும்பத்தினர் அவரை, புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.பின், அங்கிருந்து 108 ஆம்புலன்சில் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஜெயலட்சுமியுடன் அவரது மாமியார் செல்வி, 52; நாத்தனார் மல்லாபுரத்தைச் சேர்ந்த செந்தில் மனைவி அம்பிகா, 32; மற்றும் ஆஷா பணியாளர் மீனா, 50; ஆகியோரும் சென்றனர்.ஆம்புலன்சை சங்கராபுரம் அடுத்த அரூர் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி, 36; ஓட்டினார். மூங்கில்துறைப்பட்டைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் வாகன உதவியாளர் தேன்மொழி, 27; கர்ப்பிணியான மகாலட்சுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபடி சென்றார்.கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் ஏரிக்கரை அருகே அதிகாலை 4:30 மணியளவில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோர மரத்தின் மீது மோதியது.இதில் செல்வி, அம்பிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார், படுகாயமடைந்த கர்ப்பிணி ஜெயலட்சுமி, டிரைவர் கலியமூர்த்தி, உதவியாளர் தேன்மொழி, ஆஷா பணியாளர் மீனா ஆகியோரை மற்றொரு ஆம்புலன்சில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஜெயலட்சுமி இறந்தார்.மற்ற மூவரும் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.எஸ்.பி., ஜியாவுல்ஹக், டி.எஸ்.பி., ராமநாதன் மற்றும் போலீசார், விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.5வது முறை கர்ப்பம்திருமணத்திற்கு பின் ஜெயலட்சுமிக்கு, அடுத்தடுத்து இரண்டு முறை கரு கலைந்துள்ளது. அதன்பின் இரண்டு முறை குழந்தை பிறந்து, இறந்துள்ளது. தற்போது, ஐந்தாவது முறையாக கர்ப்பமடைந்த நிலையில், விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X