தமிழ்நாடு

நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்படுமா?

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர் ஆதாரம் இன்றி விவசாயம் கேள்விக்குறியாகிறது. மூலவைகை ஆற்றில் மழைக்காலத்தில் வரும் கூடுதல் நீர், பெரியாறு உபரிநீர் ஆகியவற்றை குழாய் மூலம் கொண்டு வந்து இந்தஒன்றியத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கண்மாய்களில் நிரப்பி விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்த விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.இதுதொடர்பாக

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர் ஆதாரம் இன்றி விவசாயம் கேள்விக்குறியாகிறது. மூலவைகை ஆற்றில் மழைக்காலத்தில் வரும் கூடுதல் நீர், பெரியாறு உபரிநீர் ஆகியவற்றை குழாய் மூலம் கொண்டு வந்து இந்தஒன்றியத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கண்மாய்களில் நிரப்பி விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்த விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

இதுதொடர்பாக சித்தயகவுண்டன்பட்டி விவசாயி ரத்தினவேல் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ரூ.317 கோடியில் திட்ட அறிக்கை தயார்செய்து பொதுப்பணித்துறை தலைமையிடத்திற்கு பரிந்துரைத்தனர். ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில் திட்டம் செயல்பாடின்றி கிடப்பில் போடப்பட்டது. தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும் இத்திட்டம் இடம் பெற்றது.

புதிய மதிப்பீடு:

தற்போது இத்திட்டத்திற்காக குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை இணைந்து குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி பகுதிக்கு முல்லைப்பெரியாறு உபரி நீரை குழாய் மூலம் கொண்டு வரும் துாரம், நீரின் அளவு, நீர் கொண்டு வரும் குழாய் விட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ரூ.256 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளனர். தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X