மது விற்றவர்கள் கைது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
காட்டூர், போத்தனுார் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரியை சேர்ந்த சரவணகுமார், 45, மாச்சம்பாளையத்தை சேர்ந்த உர்கலன், 36, தேனியை சேர்ந்த பிரதீப், 29 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மினி வேன்

காட்டூர், போத்தனுார் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரியை சேர்ந்த சரவணகுமார், 45, மாச்சம்பாளையத்தை சேர்ந்த உர்கலன், 36, தேனியை சேர்ந்த பிரதீப், 29 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மினி வேன் திருட்டுராமநாதபுரம், சண்முகம் வீதியை சேர்ந்தவர் மீனா, 38. இரண்டு நாட்களுக்கு முன், இவரது மினி வேனை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, மினி வேன் திருடு போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.பைக் திருட்டுகுனியமுத்துார், திரு காலனியை சேர்ந்தவர் முரளிகுமார், 42. இவர் கடந்த சில நாட்களுக்கு முன், அரசு மருத்துவமனைக்கு பைக்கில் சென்றார். பைக்கை, அரசு கலை கல்லுாரி ரோட்டில் நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக் திருடு போனது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X