பொது செய்தி

தமிழ்நாடு

புறநோயாளிகள் பிரிவு துவங்க அமைச்சரிடம் கோரிக்கை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சின்னசேலம்-சின்னசேலம் பஸ் நிலையத்தில் உள்ள பழைய மருத்துவமனைக் கட்டடத்தை சீரமைத்து, புறநோயாளிகள் பிரிவு துவங்க வேண்டும் என காங்., கட்சியினர் அமைச்சரிடம் மனு கொடுத்தனர்.கள்ளக்குறிச்சி காங்., மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ், சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியனிடம் கொடுத்துள்ள மனு:சின்னசேலம் பஸ் நிலையம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது.

சின்னசேலம்-சின்னசேலம் பஸ் நிலையத்தில் உள்ள பழைய மருத்துவமனைக் கட்டடத்தை சீரமைத்து, புறநோயாளிகள் பிரிவு துவங்க வேண்டும் என காங்., கட்சியினர் அமைச்சரிடம் மனு கொடுத்தனர்.கள்ளக்குறிச்சி காங்., மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ், சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியனிடம் கொடுத்துள்ள மனு:சின்னசேலம் பஸ் நிலையம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. பின்னர் இந்த சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, சின்னசேலம் - கூகையூர் செல்லும் சாலை அருகே, புறநகர் பகுதியில் தற்போது அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டதால், பழைய சுகாதார நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.அந்த கட்டடத்தில் புற நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகள் இருப்பதால், கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X