சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்தவர்களுக்கு 'போக்சோ'

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : கோவை காதல் ஜோடிக்கு உதவிய சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த திண்டுக்கல் நபர்கள் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கோகுல் 22. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்ய திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தார். அவர்களுக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த 17, 16 வயது

திண்டுக்கல் : கோவை காதல் ஜோடிக்கு உதவிய சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த திண்டுக்கல் நபர்கள் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கோகுல் 22. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்ய திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தார். அவர்களுக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த 17, 16 வயது சிறுவனும், சிறுமியும் வந்தனர்.திருமணம் செய்ய வந்த சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, போலீசார் விசாரித்தனர். திண்டுக்கல் தோமையார்புரத்தில் அவர்கள் இருப்பதும், அப்பகுதி இளைஞர்கள் சிலர் அவர்களுக்கு உதவுவதும் தெரிய வந்தது.

இரு தினங்களுக்கு முன் போலீசார் அவர்களை பிடிக்க முயற்சித்தபோது, காதலன் கோகுல், அவருடன் வந்த 17 வயது சிறுமியும் தப்பினர். அவர்களுடன் வந்த கோவை நண்பர்களான சிறுவன், சிறுமி, திண்டுக்கல் முகமது அலி ஜின்னா மற்றும் அலக்ஸாண்டரை போலீசார் பிடித்தனர்.அனைத்து மகளிர் போலீசார் உடன்வந்த சிறுமியிடம் விசாரித்தனர். அவருக்கு முகமது அலி ஜின்னா, அலக்ஸாண்டர் ஆகியோர் போதையில் பாலியல் தொந்தரவு அளித்தது தெரிந்தது.

குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆரோக்கியசாமி மற்றும் பாதித்த சிறுமி அளித்த புகாரின்பேரில் இருவரையும் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். தப்பியோடிய கோகுலை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X