பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் கொரோனா கட்டுப்படுத்த ஆலோசனை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கம்பம் : கம்பம் ஒன்றிய கிராமங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ரமேஷ், ஊராட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.கம்பம் ஒன்றியத்தில் சுகாதார துணை இயக்குனர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் பொன்னுத்தாய் (நாராயணத்தேவன்பட்டி), நாகமணி (சுருளிப்பட்டி) கு.பொன்னுத்தாய் (குள்ளப்பகவுண்டன்பட்டி), மொக்கப்பன்

கம்பம் : கம்பம் ஒன்றிய கிராமங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ரமேஷ், ஊராட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கம்பம் ஒன்றியத்தில் சுகாதார துணை இயக்குனர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் பொன்னுத்தாய் (நாராயணத்தேவன்பட்டி), நாகமணி (சுருளிப்பட்டி) கு.பொன்னுத்தாய் (குள்ளப்பகவுண்டன்பட்டி), மொக்கப்பன் (கருநாக்கமுத்தன்பட்டி), சாந்தி (ஆங்கூர்பாளையம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.

துணை இயக்குனர் பேசுகையில், கிராமங்களில் கொரோனாவை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர உங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அதற்கு என்ன செய்யலாம்' என்றார். பதிலளித்த ஊராட்சி தலைவர்கள், முககவசம் அணிவது, கட்டுப்படுத்த பகுதிகளுக்கு தடுப்பு கட்டுவது, விசேஷ வீடுகளுக்கு சென்று கூட்டம் கூட விடாமல் செய்வது என அனைத்து பணிகளையும் போலீசார் துணை இருந்தால் தான் செய்ய முடியும். எனவே ஊராட்சிக்கு குறைந்தது இரண்டு போலீசாராவது இப்பணிக்கு இருக்க வேண்டும்', என்றனர். மாவட்ட நிர்வாக ஆலோசனையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X