சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமான நிலம் எங்கே? வருவாய் துறை விசாரணை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் அருகே, மாயமான நிலம் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சி, மகாவிஷ்ணு நகரில், வீட்டு மனைகளுக்கு இடையே, பூங்கா, மற்றும் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது என, அப்பகுதியினர் புகார் தெரிவித்திருந்தனர்.இதுதொடர்பாக, கடந்த மாதம், 8ம் தேதி 'தினமலர்'
 மாயமான நிலம் எங்கே? வருவாய் துறை விசாரணை

பல்லடம்:பல்லடம் அருகே, மாயமான நிலம் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சி, மகாவிஷ்ணு நகரில், வீட்டு மனைகளுக்கு இடையே, பூங்கா, மற்றும் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது என, அப்பகுதியினர் புகார் தெரிவித்திருந்தனர்.இதுதொடர்பாக, கடந்த மாதம், 8ம் தேதி 'தினமலர்' திருப்பூர் பக்கத்தில் செய்தி வெளியானது. இதையறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தனர்.தொற்று பரவல் காரணமாக, விசாரணை மேற்கொள்ளும் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஒரு மாதமாக கிடப்பில் இருந்த நில அளவீடு பணி, நேற்று முன்தினம் நடந்தது. இதில், 3 ஆயிரம் சதுர அடி நிலம் மாயமானது குறித்து அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது.இதனால், பொதுமக்கள் மீண்டும் பல்லடம் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர். எனவே, 16ம் தேதி மீண்டும் அளவீடு பணி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.முறைகேட்டை கண்டறிந்து, மாயமான நிலத்தை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X