சுத்திகரிப்பு மையங்களில் பராமரிப்பு பணி வேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுத்திகரிப்பு மையங்களில் பராமரிப்பு பணி வேகம்

Added : ஜூன் 11, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையங்கள், பாரமரிப்பு பணிகளில் வேகம் காட்டிவருகின்றன.திருப்பூரில் மொத்தம் 18 சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் உள்ளன. ஒவ்வொரு பொது சுத்திகரிப்பு மையத்துக்கும், பத்து முதல் 20 சாய ஆலைகளிலிருந்து, குழாய் மூலம், சாயக்கழிவுநீர் அனுப்பிவைக்கப்படுகிறது. சுத்திகரிப்பு மையங்கள், அனைத்து நாட்களும், தினம் 24 மணி

திருப்பூர்:திருப்பூர் சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையங்கள், பாரமரிப்பு பணிகளில் வேகம் காட்டிவருகின்றன.திருப்பூரில் மொத்தம் 18 சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் உள்ளன. ஒவ்வொரு பொது சுத்திகரிப்பு மையத்துக்கும், பத்து முதல் 20 சாய ஆலைகளிலிருந்து, குழாய் மூலம், சாயக்கழிவுநீர் அனுப்பிவைக்கப்படுகிறது. சுத்திகரிப்பு மையங்கள், அனைத்து நாட்களும், தினம் 24 மணி நேரம் இயங்குவது வழக்கம்.கடந்த மே 10ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பின்னலாடை துறையில் அங்கம்வகிக்கும் சாய ஆலைகள் மற்றும் பொதுசுத்திகரிப்பு மையங்களும் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளன.அரசு அனுமதி அளித்துள்ளதால், 7ம் தேதி முதல், பனியன் உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன. குறைந்த தொழிலாளருடன் இயங்க முடியாதநிலை உள்ளதால், சாய ஆலைகள் மட்டும், தொடர்ந்து செயல்பாட்டை நிறுத்திவைத்துள்ளன. சாய ஆலை உரிமையாளர் சங்கம் அறிவுறுத்தியபடி, பொது சுத்திகரிப்பு மையங்கள், பராமரிப்பு பணிகளை தற்போது துவக்கியுள்ளன.மின் மோட்டார் பழுது நீக்கம்; பழுதடைந்த குழாய்களை மாற்றுவது, சாயக்கழிவுநீர் தேக்க தொட்டிகளை சரி செய்தல், சுத்திகரிப்பு மைய வளாகங்களை துாய்மை செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X