பொது செய்தி

தமிழ்நாடு

காகிதத்தில் மலர்ந்த பூக்கள்... கிராப்ட் தயாரிப்பில் அசத்தும் சிறுமி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கலர் கலரா காகிதப்பூக்கள்! வீட்டு வாசலில் வழிந்தோடும் மழை நீரில், காகித கப்பல் விட ஆரம்பிப்பதில் துவங்குகிறது குழந்தைகளின் படைப்புத்திறன். ஆனால், இன்று குழந்தைகளின் கற்பனை மற்றும் படைப்பு திறனை மொபைல் போன்களும், டிவிக்களும் முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டன.அதிலும், இந்த 'லாக்டவுனில்' சொல்லவே வேண்டாம். இருப்பினும், இந்த சமயத்திலும் குழந்தைகள் பலர் தங்கள்
 காகிதத்தில் மலர்ந்த பூக்கள்... கிராப்ட்  தயாரிப்பில்  அசத்தும் சிறுமி

கலர் கலரா காகிதப்பூக்கள்! வீட்டு வாசலில் வழிந்தோடும் மழை நீரில், காகித கப்பல் விட ஆரம்பிப்பதில் துவங்குகிறது குழந்தைகளின் படைப்புத்திறன். ஆனால், இன்று குழந்தைகளின் கற்பனை மற்றும் படைப்பு திறனை மொபைல் போன்களும், டிவிக்களும் முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டன.அதிலும், இந்த 'லாக்டவுனில்' சொல்லவே வேண்டாம். இருப்பினும், இந்த சமயத்திலும் குழந்தைகள் பலர் தங்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். அதில் ஒருவர்தான் திருமுருகன்பூண்டியை சேர்ந்த ஹாசினி.ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பிற்கு அடியெடுத்து வைக்கும் இவர், வீட்டில் இருக்கும் இந்த பொன்னான நேரத்தை காகித கலைப்பொருட்களை தயாரிக்க அர்ப்பணித்து வருகிறார்.''அம்மா கீதாலட்சுமி நல்லா வரைவாங்க. அதைப்பார்த்து எனக்கும் டிராயிங் மேல் ஆர்வம் வந்தது. உடனே என்னை ஆர்ட் அண்ட் கிராப்ட் பயிற்சி வகுப்பிற்கு அனுப்புனாங்க. இக்கலை இந்த லாக்டவுனில் மிகவும் கைக்கொடுக்கிறது. ஊரடங்கிற்கு முன்னாடியே தேவையான கிராப்ட் பேப்பர்களை வாங்கி வெச்சுக்கிட்டேன்.பொழுதுபோகலைனா உடனே கலர் பேப்பர்களை எடுத்துட்டு உக்கார்ந்துப்பேன். பேப்பர் கிராப்ட்ஸ், பேக்ஸ், பூக்கள், குருவிக்கூடு, வால் ஹேங்கிங், பட்டங்கள், போட்டோ பிரேம் என நுாற்றுக்கணக்கான பொருட்கள் வடிவமைத்துள்ளேன்.அம்மா, அப்பாவுக்கு, நெருங்கிய நண்பர்களுக்கு பரிசளிப்பேன். கூட இருப்பவர்களை இப்படி சின்ன சின்ன விஷயங்கள் மூலமா சந்தோஷப்படுத்திட்டே இருந்தாலே எந்த நோயும் பக்கம் வராதுனு அம்மா சொன்னாங்க.நீங்களும் உங்க அன்பை காமிச்சுட்டே இருங்க பிரிண்ட்ஸ்...!'' என மழலை மாறாத குரலில், சொன்ன ஹாசினிக்கு 'கங்கிராட்ஸ்' சொல்லி விடைபெற்றோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X