தமிழ்நாடு

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் 'பாஸ் மார்க்' எதிர்பார்ப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கொரோனாவால் பொதுத்தேர்வை அறிவிக்கும் முன்பே 10, 11 ம் வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது.குறிப்பாக, இரண்டு கட்டமாக செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 21 ஆயிரத்து 200 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத இருந்தனர். இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பிளஸ் 2 பொதுத்தேர்வை
பிளஸ் 2 தனித்தேர்வர்கள் 'பாஸ் மார்க்' எதிர்பார்ப்பு

கொரோனாவால் பொதுத்தேர்வை அறிவிக்கும் முன்பே 10, 11 ம் வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது.

குறிப்பாக, இரண்டு கட்டமாக செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 21 ஆயிரத்து 200 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத இருந்தனர். இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவிட்டது. மாற்றுத்திறனாளிகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட தனித்தேர்வர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்து தயாராகி வந்தனர்.

இந்நிலையில் பொதுத்தேர்வு ரத்தானதால் தனித் தேர்வர்களின் நிலைமையும் கேள்விக் குறியானது. 2020 ல் தொற்று காரணமாக 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்த நிலையில் தனித்தேர்வர்களுக்கு மட்டும் தனியே தேர்வு நடத்தப்பட்டது.இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கு ஏதோ ஒருமுறையில் மதிப்பெண் வழங்க உள்ளனர்.

அதேபோல், தனித்தேர்வர்களுக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கி 'பாஸ்' செய்ய வேண்டும். இல்லையெனில், தொற்று குறைந்தவுடன் பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு தனியே பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X