பொது செய்தி

தமிழ்நாடு

'உங்கள் தொகுதியில் முதல்வர்' பிரிவில் 137 அதிகாரிகள் நியமனம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' பிரிவுக்கு என பல்வேறு துறைகளை சேர்ந்த 137 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சட்டசபை தேர்தலில் தி.மு.க., பிரசாரத்தில் கட்சித் தலைவர் ஸ்டாலின், 'நுாறு நாட்களில் குறைகளை தீர்ப்பேன்' எனக் கூறி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அதன் மீது நடவடிக்கை எடுக்க 'உங்கள் தொகுதியில் முதல்வர்' எனும் சிறப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' பிரிவுக்கு என பல்வேறு துறைகளை சேர்ந்த 137 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க., பிரசாரத்தில் கட்சித் தலைவர் ஸ்டாலின், 'நுாறு நாட்களில் குறைகளை தீர்ப்பேன்' எனக் கூறி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அதன் மீது நடவடிக்கை எடுக்க 'உங்கள் தொகுதியில் முதல்வர்' எனும் சிறப்பு துறை உருவாக்கப்பட்டது. இதற்காக மாவட்டங்களில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்க அரசு உத்தரவிட்டது.

அக்குழு பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளது. திண்டுக்கல்லில் மாநகராட்சி, நகராட்சி, ஊரக வளர்ச்சி, வனத்துறை, நெடுஞ்சாலை, மின்வாரியம் உட்பட அனைத்துத் துறை சம்பந்தமான மனுக்களுக்கும் தீர்வு காண 137 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். cmcell.tn.gov.in ல் கோரிக்கைகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறியலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X