பொது செய்தி

தமிழ்நாடு

கோடையிலும் குளங்களுக்கு நீர்வரத்து

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : பரப்பலாறு அணையால் ஒட்டன்சத்திரம் பகுதியில் 6 குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொதுவாக கோடை காலத்தில் ஏரி, குளங்கள் வற்றி நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடும்.இந்த ஆண்டு அவ்வப்போது பெய்த மழையால் பரப்பலாறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தது. எனவே பாசனத்திற்கு

ஒட்டன்சத்திரம் : பரப்பலாறு அணையால் ஒட்டன்சத்திரம் பகுதியில் 6 குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுவாக கோடை காலத்தில் ஏரி, குளங்கள் வற்றி நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடும்.இந்த ஆண்டு அவ்வப்போது பெய்த மழையால் பரப்பலாறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தது. எனவே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசை வலியுறுத்தினர். அதை நிறைவேற்றும் வகையில் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சக்கரபாணி, பரப்பலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டார்.

இதனால் முத்துபூபாலசமுத்திரம், சடையன்குளம், செங்குளம், பெருமாள் குளம், ராம சமுத்திரம் கண்மாய், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகியவற்றுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப்பின் கோடையிலும் குளங்களுக்கு தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X