பொது செய்தி

தமிழ்நாடு

திரவ உயிர் உரங்கள் பயன்படுத்த வேளாண் துறை அறிவுறுத்தல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விழுப்புரம்-மாவட்ட விவசாயிகள் திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ரமணன் செய்திக்குறிப்பு:வேளாண்மையில் ரசாயன உரங்களின் தொடர்ச்சியான பயன்பாடு அதிகரித்து வருவதால் மண் வளம் பாதிக்கும் சூழல் உள்ளது. இதைத் தவிர்க்க விவசாயிகள் உயிர் உரங்கள் பயன்படுத்தி மண்ணின் வளத்தை வளமாக்க

விழுப்புரம்-மாவட்ட விவசாயிகள் திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ரமணன் செய்திக்குறிப்பு:வேளாண்மையில் ரசாயன உரங்களின் தொடர்ச்சியான பயன்பாடு அதிகரித்து வருவதால் மண் வளம் பாதிக்கும் சூழல் உள்ளது. இதைத் தவிர்க்க விவசாயிகள் உயிர் உரங்கள் பயன்படுத்தி மண்ணின் வளத்தை வளமாக்க வேண்டும்.குறைந்த செலவில் சுற்றுச் சூழலுக்கு உகந்த அங்கக இடு பொருட்களான திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து மண்வளம் பாதுகாத்து அதிக மகசூல் கிடைக்கிறது.மணம்பூண்டி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் அமைந்துள்ள உயிர் உர உற்பத்தி மையத்தில் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம், பயறு வகைகள், வேர்க்கடலைக்கு ரைசோபியம், அனைத்து பயிர்களுக்குமான பாஸ்போ பாக்டிரியா, பொட்டாஷ் பாக்டிரியா உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.நெல் மற்றும் இதர பயிர்களுக்கு அசோபாஸ் உள்ளிட்ட 8 வகையான உயிர் உரங்கள் ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்களாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.எனவே, சொர்ணவாரி மற்றும் காரீப் பருவ சாகுபடி விவசாயிகள் திரவ உயிர் உரங்களை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் பெற்று பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X