பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம் மூடி மறைப்பது எதற்காக?

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:கொரோனா தடுப்பூசி போடுவதை மூடி மறைக்காமல், பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு செய்து, முகாம் நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, நஞ்சப்பா பள்ளி உள்ளிட்ட பகுதிகளில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. கடந்த, 4ம் தேதிக்கு பிறகு, மாவட்டத்தில் எங்கும் தடுப்பூசி போடப்படவில்லை; ஆர்வமாக வந்த மக்கள்
 தடுப்பூசி முகாம் மூடி மறைப்பது எதற்காக?

திருப்பூர்:கொரோனா தடுப்பூசி போடுவதை மூடி மறைக்காமல், பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு செய்து, முகாம் நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, நஞ்சப்பா பள்ளி உள்ளிட்ட பகுதிகளில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. கடந்த, 4ம் தேதிக்கு பிறகு, மாவட்டத்தில் எங்கும் தடுப்பூசி போடப்படவில்லை; ஆர்வமாக வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.முகாம்களில், 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதல் 'டோஸ்' என்றும், சில பகுதிகளில் இரண்டாவது 'டோஸ்' என்றும் மக்களை குழப்பிவிட்டனர். எந்த மையத்தில் எத்தகைய ஊசி போடப்படுகிறது என்ற தகவல் கிடைப்பதில்லை.ஒவ்வொரு மையத்திலும், தினமும், 150க்கும் குறைவான தடுப்பூசி மட்டும் ஒதுக்கப்படுகின்றன. தடுப்பூசி குறித்து தெளிவான அறிவிப்பு இல்லாததால், பொதுமக்கள் அதிகாலை முதல் வரிசையில் காத்திருக்கின்றனர். மருந்து கைவசம் இல்லையென்று கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். அதன்பின், மாலை வரை ஒரு சிலருக்கு மட்டும் தடுப்பூசி போடப்படுகிறது.மா.கம்யூ.,வினர் மனுஇந்த பிரச்னை குறித்து, மா.கம்யூ., நிர்வாகிகள், ஆர்.டி.ஓ., விடம் கொடுத்த மனு:கிராமப்புற மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி மருந்தின் பெயர், செலுத்தும் மையம், வயது வகைப்பாடு, 'டோஸ்' விவரங்களை, ஒரு நாள் முன்னதாகவே,வெளியிட வேண்டும். ஊசி போட்டு கொண்டவர்களுக்கு உடனடியாக, அத்தாட்சி கடிதம் வழங்கப்பட வேண்டும்.மக்கள் கூட்டம் சேர்வதை தவிர்த்திட, அனைவருக்கும் உரிய நேரத்தில் தடுப்பூசி சென்று சேரும் வகையில், பள்ளிகள், சமுதாயக்கூடம் போன்ற இடங்களில், கூடுதல் தடுப்பூசி மையங்கள் அமைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X