பொது செய்தி

தமிழ்நாடு

முன்பதிவு செய்து நெல் கொண்டு வாருங்கள்: விவசாயிகளுக்கு அமைச்சர் அட்வைஸ்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
செஞ்சி-வல்லத்தில், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் மயிலம் சட்டசபை தொகுதியில் பெறப்பட்ட மனுக்களில் 75 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் முன்னிலை வகித்தார். சப் கலெக்டர் அனு வரவேற்றார். கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங்,

செஞ்சி-வல்லத்தில், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் மயிலம் சட்டசபை தொகுதியில் பெறப்பட்ட மனுக்களில் 75 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் முன்னிலை வகித்தார். சப் கலெக்டர் அனு வரவேற்றார். கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங், திட்ட அலுவலர் காஞ்சனா முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரகுகுமார், பி.டி.ஓ., ரவி, தாசில்தார் பிரபு வெங்கடேஸ்வரன், டி.எஸ்.பி., இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, செந்தமிழ்செல்வன், சேதுநாதன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், பயனாளிகளுக்கு ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கினார்.தொடர்ந்து, நாட்டார்மங்கலம் ஊராட்சியில் நுகர் பொருள் வாணிபக் கழகம் சார்பில் நடந்து வரும் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார்.அப்போது, விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நெல்லின் தரத்தை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கருத்து கேட்டவர், நெல் கொண்டு வரும் விவசாயிகள் வீண் அலைச்சலுக்கு ஆளாவதைத் தவிர்க்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முன் பதிவு செய்து நெல் கொண்டு வந்து பயனடையுமாறு கேட்டு கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X