பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் மலைப்பகுதியில் போலீஸ் பற்றாக்குறையால் சிரமம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதியில் போதிய ஆட்கள் இல்லாததால், போலீசார் மனஉளைச்சலில் உள்ளனர்.கொடைக்கானலுக்கு 40, தாண்டிக்குடி 33, மகளிர் காவல் நிலையத்தில் 15, போக்குவரத்திற்கு 15 போலீசார் என 100 க்கும் மேற்பட்டோர் மலைப்பகுதி பணியில் உள்ளனர்.இவர்களில் பலர் பாதுகாப்பு, அலுவலகங்கள் என அயல்பணியில் சென்று உள்ளனர். தாண்டிக்குடி, கொடைக்கானல் ஸ்டேஷன்கள் 80 கி.மீ., சுற்றளவில்

கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதியில் போதிய ஆட்கள் இல்லாததால், போலீசார் மனஉளைச்சலில் உள்ளனர்.

கொடைக்கானலுக்கு 40, தாண்டிக்குடி 33, மகளிர் காவல் நிலையத்தில் 15, போக்குவரத்திற்கு 15 போலீசார் என 100 க்கும் மேற்பட்டோர் மலைப்பகுதி பணியில் உள்ளனர்.இவர்களில் பலர் பாதுகாப்பு, அலுவலகங்கள் என அயல்பணியில் சென்று உள்ளனர். தாண்டிக்குடி, கொடைக்கானல் ஸ்டேஷன்கள் 80 கி.மீ., சுற்றளவில் பரந்துபட்டதாக இருந்தும் போலீஸ் பற்றாக்குறையால் அன்றாட அலுவல், பாதுகாப்பு, விசாரணை என திணறுகின்றனர்.25க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஆண்டுக்கணக்கில் காலியாகவே உள்ளன.

இருபதுக்கும் மேற்பட்டோர் அயல்பணிக்கு சென்றதால் இவர்களது பணியை கூடுதலாக கவனிக்கும் போலீசார் மன உளைச்சலில் உள்ளனர்.குடியிருப்பு வசதியில்லாததால் ஸ்டேஷன், வாடகைக்கு வீடுகளில் தங்கியுள்ளனர். விடுமுறையில்தான் குடும்பத்தினரை சந்திக்கும் நிலை உள்ளது. இது குறித்து போலீசார் குமுறியும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, காலிப்பணியிடங்களை நிரப்பி, போலீசாரின் மனஉளைச்சலை போக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X