பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பின் பிடியில் கரடிச்சோலை வனப் பகுதி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் கரடிச் சோலை வனப்பகுதி ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கி வருகிறது.கொடைக்கானல் நகரின் மையத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது கரடிச்சோலை அருவி. சில ஆண்டுகளாக இங்கு பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.இதனருகே குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் ஏராளமாக உள்ளன. இரு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் மக்கள் நடமாட்டமில்லை. இந்தச் சூழலைப்

கொடைக்கானல் : கொடைக்கானல் கரடிச் சோலை வனப்பகுதி ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கி வருகிறது.

கொடைக்கானல் நகரின் மையத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது கரடிச்சோலை அருவி. சில ஆண்டுகளாக இங்கு பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.இதனருகே குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் ஏராளமாக உள்ளன. இரு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் மக்கள் நடமாட்டமில்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி விவசாயிகள் வனப் பகுதியை ஆக்கிரமித்து வருகின்றனர்.

அத்துமீறி வனப்பகுதியில் மரங்களை அகற்றுவது, வனப்பகுதியை தங்கள் நிலத்துடன் இணைப்பது என செயல்படுகின்றனர். இதற்கு வனத்துறையும் உடந்தையென இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.வனத்துறை கண்டுகொள்ளாததால், கரடிச்சோலை வனப்பகுதி சுருங்கி வருகிறது. மாவட்ட நிர்வாகம் வனப்பகுதி ஆக்கிரமிப்பை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X