பொது செய்தி

தமிழ்நாடு

சென்னைக்கு ரயில் இயக்கம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
வரும் 16ம் தேதி முதல் கோவை - சென்னை (இன்டர்சிட்டி), கோவை - மங்களூரு , கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி முதல் மேட்டுப்பாளையம் - சென்னை (நீலகிரி எக்ஸ்பிரஸ்), 18ம் தேதி முதல் கோவை - சென்னை வாராந்திர ரயில் இயங்கவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.சுவாச கருவிகள்
 சென்னைக்கு ரயில் இயக்கம்

வரும் 16ம் தேதி முதல் கோவை - சென்னை (இன்டர்சிட்டி), கோவை - மங்களூரு , கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி முதல் மேட்டுப்பாளையம் - சென்னை (நீலகிரி எக்ஸ்பிரஸ்), 18ம் தேதி முதல் கோவை - சென்னை வாராந்திர ரயில் இயங்கவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாச கருவிகள் வழங்கல்
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில், பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர். அவ்வகையில், ரோட்டரி திருப்பூர் குமரன் சார்பில், என்.ஆர்.எம்., வகை சுவாச கருவிகள் நேற்று வழங்கப்பட்டன. மொத்தம், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான என்.ஆர்.எம்., வகை சுவாச கருவிகள், 'டீன்' முருகேசனிடம் வழங்கப்பட்டது. முன்னாள் தலைவர் பலராம்குமார், செயலாளர் ராம்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர், சுவாச கருவிகளை ஒப்படைத்தனர். இவை, கொரோனா அவசர சிகிச்சை பிரிவில், மூச்சுவிட சிரமப்படும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுமென, டாக்டர்கள் தெரிவித்தனர்.சித்த மருத்துவ முகாம்சேவாபாரதி சார்பில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தாராபுரம், கொண்டரசம்பாளையத்தில் உள்ள கவுண்டச்சிபுதுார் ஊராட்சி அலுவலகத்தில் நேற்று, மருத்துவ முகாம் நடந்தது. சித்த மருத்துவர் கார்த்திகா, பொதுமக்களுக்கு, கொரோனா தடுப்பு வழிமுறைகள் மற்றும் உணவு முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். முகாமில் பங்கேற்ற நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா பரவும் அபாயம்
முக கவசம், கையுறையை மட்டுமின்றி, முழு கவச உடையை பொது இடத்தில் வீசுவது பல்லடத்தில் அதிகரித்துள்ளது. 'மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உதவியாளர்கள், துாய்மை காவலர்கள், தொற்று பாதிக்கப்பட்டவர்கள், பாதுகாப்பு நடவடிக்கையாக கொரோனா கவச உடை அணிகின்றனர். அவ்வாறு பயன்படுத்தப்பட்ட கவச உடை அலட்சியத்துடன் ரோட்டில் வீசப்படுகிறது. இவற்றால், தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது.அமாவாசை சிறப்பு பூஜைவெள்ளகோவில், ஓலப்பாளையம் - முருகங்காட்டு வலசு ஸ்ரீ தம்பிக்கலைய சுவாமி கோவிலில் நேற்று காலை வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், வீரசோழபுரம் அடஞ்சாரம்மன் கோவில், ஏரி மொண்டி கருப்பண்ணசாமி, யானை மேல் அழகிய அம்மன், ஏலையப்பசாமி கருப்பண்ணசாமி உட்பட பல்வேறு கோவில்களிலும் அமாவாசை சிறப்பு பூஜைகளை அர்ச்சகர்கள் நடத்தினர். பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. வீரக்குமாரசாமி கோவிலில் நேற்று அமாவாசை சிறப்பு பூஜை நடை பெறவில்லை; வழக்கம் போல் பூஜை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.120 குடும்பத்துக்கு நிவாரணம்திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மேற்குபதி, கொன்னக்காடு, சின்னேரிபாளையம், பகுதியில் உள்ள, 120 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் யுவராஜ் ஏற்பாட்டில், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட துணை தலைவர் நடராஜன், ஒன்றிய தலைவர் ஜெகதீசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.பொதுமக்களுக்கு அன்னதானம்பொங்கலுாரில் உள்ள சத்திய ஞான சபை கோவில் சார்பில் கொரோனா பாதித்த நாள் முதல் ஏழைகள், நலிவுற்றோர், குழந்தைகள் மற்றும் மருத்துவமனை நோயாளிகளுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. முன்பு ஒரு நாளைக்கு, 100 பேர் வரை மதிய உணவு சாப்பிட்டு வந்தனர். தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், தற்போது, 500 பேர் வரை நாள்தோறும் சாப்பிட்டு பசியாறி வருகின்றனர்.பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை மற்றும் பொதுமக்கள் தரும் உதவிகளால் இந்த கோவிலில் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X